இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
28
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்த கேஎல் ராகுலுக்குப் பதிலாக சுப்மன் கில் அணியில் இடம் பெற்றுள்ளார். இன்றைய போட்டியில் அவர் தான் ரோகித் சர்மா உடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். மேலும், முகமது ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
38
ஓரங்கட்டப்பட்ட கேஎல் ராகுல்
ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ் நாடு திரும்பியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
48
இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட்
இந்தியா வந்த ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
58
இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட்
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் நடக்கிறது. இதில், இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும். ஆஸ்திரேலியா 2ஆவது இடத்திற்கு தள்ளப்படும்.
68
இந்தூர் டெஸ்ட்
ஏற்கனவே இந்தூரில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில் இந்தூரில் வெளிநாட்டு அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் இது வரலாற்று சாதனையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.