கிரிக்கெட் ரசிகர்களால் 'கிங் கோலி' என்று செல்லமாக அழைக்கப்படுபவர் விராட் கோலி. விளையாட்டு வீரர்களுக்கே உரிய ஃபிட்னஸ் விஷயங்களில் அக்கறை காட்டுவதுடன், விளம்பரங்களில் நடிப்பதாலும், உடல் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அப்படி கட்டுக்கோப்பான உடலை கொண்டிருக்கும் விராட் கோலி தனது உடல் முழுவதிலும் டாட்டூ போட்டுள்ளார். அப்படி என்னென்ன டாட்டூ போட்டிருக்கிறார் தெரியுமா? கடவுளின் கண், ஜப்பானின் சாமுராய், 175, 269, அம்மாவின் பெயர், அப்பாவின் பெயர், சிவன், மடாலயம், ஸ்கார்பியோ, ஓம், பழங்குடி என்று பலவிதமான டாட்டூகள் போட்டுள்ளார். தற்போது புதிதாக ஒரு டாட்டூவையும் போட்டுள்ளார்.