Indian Sports Honours 2023:கோட் சூட் அணிந்து மனைவி அனுஷ்கா சர்மா உடன் ரெட் கார்பெட்டில் வலம் வந்த விராட் கோலி!

First Published | Mar 24, 2023, 10:30 AM IST

மும்பையில் நடந்த இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கலந்து கொண்டு ரெட் கார்பெட்டில் வலம் வந்தார். 
 

இந்திய விளையாட்டு விருதுகள் 2023

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய விளையாட்டு விருதுகள் 2023

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 4ஆவது இந்திய விளையாட்டு விருதுகள் 2023 வழங்கும் விழா மும்பையில் உள்ள ஜே டபிள்யூ மாரியட ஜூஹூ பகுதியில் நேற்று நடந்தது.

Tap to resize

இந்திய விளையாட்டு விருதுகள் 2023

இதில் கிரிக்கெட் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். கடந்த 22 ஆம் தேதி  சென்னையில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் விராட் கோலி விளையாடினார். இதில், விராட் கோலி 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 248 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய விளையாட்டு விருதுகள் 2023

இந்த நிலையில், போட்டி முடிந்த நிலையில், மும்பை சென்ற விராட் கோலி அங்கு நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் தனது மனைவி அனுஷகா சர்மாவுடன் கலந்து கொண்டு ரெட் கார்பெட்டில் வலம் வந்தார். இதற்காக அவர், டார்க் நீல நிற கோட் சூட் அணிந்து வந்திருந்தார். அனுஷ்கா சர்மாவும், நீல் நிற உடையில், காதுகளில் டைமண்ட் நகை அணிந்து வந்தித்தார். இருவரும் ஒன்றாக ரெட் கார்பெட்டில் வலம் வந்தனர்.
 

இந்திய விளையாட்டு விருதுகள் 2023

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள மைதான் படத்தில் கால்பந்து பயிற்சியாளராக சையது அப்துல் ரஹீம் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதே போன்று அஜய் தேவ்கன் இயக்கி நடித்த போலா என்ற படம் வரும் வாரம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்திய விளையாட்டு விருதுகள் 2023

இதே போன்று, பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே அவரது தந்தை பிரகாஷ் படுகோனே ஆகியோரும் ரெட் கார்பெட்டில் வலம் வந்தனர். பிரகாஷ் படுகோன் முன்னாள் பேட்மிண்டன் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1980 ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த மாத தொடக்கத்தில், தீபிகா படுகோன் பாரிஸ் பேஷன் வீக்கில் லூயிஸ் உய்ட்டன் நிகழ்ச்சியில் காணப்பட்டார். அதன் பின்னர் இந்தியா இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற 95வது அகாடமி விருதுகளில் தொகுப்பாளராகவும் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்திய விளையாட்டு விருதுகள் 2023

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடியின் மகன் அங்கத் பேடி தனது மனைவி நடிகை நேஹா தூபியாவுடன் வந்துள்ளார். அவர் நீல நிற உடையை அணிந்திருந்தார், நேஹா ஒரு பாசி பச்சை நிற மாடர்ன் போர்வை அணிந்திருந்தார். அங்கத் மற்றும் நேஹா இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 

இந்திய விளையாட்டு விருதுகள் 2023

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் இந்த விழாவின் ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் வலம் வந்தார். அபிஷேக் பச்சன், புரோ கபடி லீக் அணியான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் உரிமையாளராகவும், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து அணியின் சென்னையின் எஃப்சியின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.
 

இந்திய விளையாட்டு விருதுகள் 2023

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இந்த விருது விழங்கும் விழாவில் கலந்து கொண்டு ரெட் கார்பெட்டில் வலம் வந்தார். இதற்காக அவர் கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்திருந்தார்.

Latest Videos

click me!