இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, உஸ்மான் கவாஜா(180) மற்றும் கேமரூன் க்ரீனின்(114) அபாரமான சதங்களால் முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாராவும் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருமுனையில் நிலைத்து ஆடி சதமடித்த கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். 128 ரன்களுக்கு கில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி வாரிக்குவித்த சாதனைகளின் பட்டியல்.! லெஜண்ட்ஸ் லிஸ்ட்டில் சாதனை நாயகன் கோலி
ஜடேஜா 28 ரன்கள் மட்டுமே அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய கேஎஸ் பரத் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆடிய விராட் கோலி சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை விளாசினார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் இது கோலியின் 75வது சதம்.
ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் காயம் காரணமாக பேட்டிங் ஆடமுடியவில்லை. கோலியுடன் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அக்ஸர் படேல் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அஷ்வின் (7), உமேஷ் யாதவ்(0) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். கடைசியாக ஷமி கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இரட்டை சதத்தை கோலி நெருங்கிய நிலையில், கடைசி விக்கெட் இதுவென்பதால், கோலியின் இரட்டை சதத்தை தடுக்கும் முனைப்பில் ஃபீல்டர்களை பவுண்டரி லைனில் நிறுத்தி பவுண்டரியை தடுத்து அழுத்தம் போட்டது ஆஸ்திரேலிய அணி. கடைசியில் வேறு வழியின்றி தூக்கியடித்து 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கோலி. முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் அடித்த இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றது.
2வது டெஸ்ட்டிலும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா