கிங் எப்போதும் கிங் தான்: 1207 நாட்களுக்குப் பிறகு 75ஆவது சதம் அடித்து சாதனை படைத்த விராட் கோலி!

First Published Mar 12, 2023, 1:35 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28 ஆவது சதத்தை இன்று பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.
 

விராட் கோலி

இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா எல்லா விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்துள்ளது. 

விராட் கோலி

இதைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது. இதில், ரோகித் சர்மா (35), புஜாரா (42), சுப்மன் கில் (128) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இன்றைய 4ஆம் நாளில் ரவீந்திர ஜடேஜா 28 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் எளிமையான முறையில் வெளியேறினார்.

விராட் கோலி

ஒருபுறம் நிலைத்து நின்று ஆடி ரன்கள் குவித்த விராட் கோலி அரை சதம் அடித்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 4000 ரன்களுக்கு மேல் அடித்த 5ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

விராட் கோலி

இந்த நிலையில், 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஒரு ரன் எடுத்து 75 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதற்காக 552 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டியில் தனது 28ஆவது சதத்தை நிறைவு செய்தார். இந்த சதத்தை பூர்த்தி செய்ய அவர், 41 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார்.
 

டெஸ்ட் - சதம் அடிக்க விராட் கோலி விளையாடிய இன்னிங்ஸ்:

ஒவ்வொரு சதமும் அடிக்க டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடி இன்னிங்ஸ்...

27ஆவது மற்றும் 28ஆவது சதம் அடிக்க 41 இன்னிங்ஸ்
25 மற்றும் 26ஆவது சதம் அடிக்க 10 இன்னிங்ஸ்
11 மற்றும் 12 ஆவது சதம் அடிக்க 11 இன்னிங்ஸ்
6ஆவது மற்றும் 7ஆவது சதம் அடிக்க 10 இன்னிங்ஸ்

241 பந்துகளில் சதம் விளாசிய கோலி:

இந்தப் போட்டியில் டெஸ்ட் சதம் அடிக்க அவர் 241 பந்துகள் விளையாடியுள்ளார். இதற்கு முன்னதாக,

2012 - 199 பந்துகள் - ஆஸ்திரேலியா - அடிலெய்டு
2012 - 289 பந்துகள் - இங்கிலாந்து - நாக்பூர்
2013 - 199 பந்துகள் - ஆஸ்திரேலியா - சென்னை
2018 - 214 பந்துகள் - பெர்த் - ஆஸ்திரேலியா
2023 - 241 பந்துகள் - ஆஸ்திரேலியா - அகமதாபாத்*

ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள்:

ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள்:

சச்சின் டெண்டுல்கர் - ஆஸ்திரேலியா - 20 சதங்கள்
சச்சின் டெண்டுல்கர் - இலங்கை - 17 சதங்கள்
விராட் கோலி - ஆஸ்திரேலியா - 16 சதங்கள்*
விராட் கோலி - இலங்கை - 16 சதங்கள்
 

விராட் கோலி

கடந்த ஆண்டு செப்டமர் 8ஆம் தேதி டி20 போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, டிசம்பர் 10 ஆம் தேதி ஒரு நாள் போட்டியில் சதம் விளாசினார். தற்போது மார்ச் 12 ஆம் தேதியான இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.
 

விராட் கோலி நம்பர் 1

கடந்த 1207 நாட்களுக்குப் பிறகு விராட் கோலி தனது 28ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அதிக முறை சதம் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக

விராட் கோலி - 75 சதங்கள்
ஜோ ரூட் - 45 சதங்கள்
டேவிட் வார்னர் - 45 சதங்கள்
ரோகித் சர்மா - 43 சதங்கள்
ஸ்டீவ் ஸ்மித் - 42 சதங்கள்

click me!