சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா என்ற இருபெரும் லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் சாதனைகளை தகர்த்தார் விராட் கோலி

Published : Mar 11, 2023, 07:01 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா என்ற இருபெரும் ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்துள்ளார்.  

PREV
14
சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா என்ற இருபெரும் லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் சாதனைகளை தகர்த்தார் விராட் கோலி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, உஸ்மான் கவாஜா (180) மற்றும் கேமரூன் க்ர்ன் (114) ஆகிய இருவரின் அபாரமான சதங்களால் முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.
 

24

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் அடித்துள்ளது. ஷுப்மன் கில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 128 ரன்களை குவித்தார் ஷுப்மன் கில். அரைசதம் அடித்த விராட் கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரனக்ளுடனும் களத்தில் உள்ளனர்.

IND vs AUS: ஷுப்மன் கில் அபார சதம்.. விராட் கோலி அரைசதம்..! பெரிய ஸ்கோரை நோக்கி இந்தியா

34

இந்த போட்டியில் அடித்த 42 ரன்கள் அடித்தபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 5வது வீரர் என்ற சாதனையை படைத்தார் கோலி. இதற்கு முன் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக் ஆகிய நால்வரும் இந்த சாதனையை படைத்துள்ளனர். அவர்களுடன் இப்போது விராட் கோலியும் இணைந்துள்ளார். ஆனால் இதை விரைவில் எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கவாஸ்கர் 87 இன்னிங்ஸ்களிலும், டிராவிட் 88 இன்னிங்ஸ்களிலும், சச்சின் 78 இன்னிங்ஸ்களிலும் இந்த மைல்கல்லை எட்டியிருந்த நிலையில், 77 இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை எட்டி சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து முரளிதரனை விரட்டும் அஷ்வின்

44

மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்கு  அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் இருந்த பிரயன் லாராவை பின்னுக்குத்தள்ளி விராட் கோலி 2ம் இடத்தை பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
 

Read more Photos on
click me!

Recommended Stories