ரோகித் சர்மா - 17017 ரன்கள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா - 17017 ரன்கள்
இதையடுத்து, நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடந்தது.
ரோகித் சர்மா - 17017 ரன்கள்
இந்தப் போட்டியில் அவர் 45 ரன்கள் எடுத்திருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் எடுத்திருப்பார். ஆனால், அவர் வெறும் 12, 12 என்று 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா - 17017 ரன்கள்
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது. இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது. தற்போது வரையில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 72 ரன்கள் குவித்துள்ளது.
ரோகித் சர்மா - 17017 ரன்கள்
இதில் ரோகித் சர்மா 34 ரன்களும், சுப்மன் கில் 37 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிகெட்டில் 17 ஆயிரம் ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இணைவார் என்று கூறப்பட்டது.
ரோகித் சர்மா - 17017 ரன்கள்
இந்த நிலையில், ரோகித் சர்மா 20 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு பவுண்டரி அடித்து 17 ஆயிரம் ரன்களை கடந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையாளர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 7ஆவது இடம் பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மா - 17017 ரன்கள்
இதற்கு முன்னதாக,
1) சச்சின் - 34357
2) விராட் கோலி - 25047
3) ராகுல் டிராவிட் - 24208
4) சவுரவ் கங்குலி - 18575
5) எம்எஸ் தோனி - 17266
6) விரேந்திர சேவாக் - 17253
7) ரோகித் சர்மா - 17017
இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, எம் எஸ் தோனி, சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக் ஆகியோர் 17 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.