IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா பிரதமர்கள் முன்னிலையில் நடக்கிறது அகமதாபாத் டெஸ்ட்..!

Published : Mar 09, 2023, 10:25 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே  அகமதாபாத்தில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியை இருநாட்டு பிரதமர்களும் ஸ்டேடியத்திர்கு வந்து நேரில் பார்க்கின்றனர். இரு நாட்டு வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.  

PREV
16
IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா பிரதமர்கள் முன்னிலையில் நடக்கிறது அகமதாபாத் டெஸ்ட்..!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பாரம்பரியமான பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
 

26

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியை இருநாட்டு பிரதமர்களும் ஸ்டேடியத்திற்கு வந்து நேரில் பார்த்துவருகின்றனர்.

IND vs AUS: கடைசி டெஸ்ட் டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்
 

36

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் ஆகிய இருவரும் மைதானத்தில் வலம்வந்தனர்.

46

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளின் கேப்டன்களுக்கு தொப்பி கொடுத்து இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

56

போட்டிக்கு முன் ஒலிக்கப்படும் இருநாட்டு தேசிய கீதங்களில் 2 பிரதமர்களும் வீரர்களுடன் கலந்துகொண்டு, வீரர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Explainer: ICC WTC ஃபைனல்: இந்தியா-இலங்கை இடையே போட்டி! அனைத்துவிதமான சாத்தியக்கூறுகள், கணக்கீடுகள் ஓர் அலசல்

66

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி

Read more Photos on
click me!

Recommended Stories