இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
25
3வது டெஸ்ட்டில் பெற்ற வெற்றியால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி இன்று அகமதாபாத்தில் தொடங்கும் கடைசி டெஸ்ட்டில் ஜெயித்தால் தான் இந்த தொடரை வெல்வதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய அணி வெற்றி கட்டாயத்துடன் களமிறங்கியுள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜுக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.