கிறிஸ்டியானோ ரொனால்டோவை இமிடேட், நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் - விராட் கோலியின் ஃபன்னி மூவ்மெண்ட்ஸ்!

First Published | Mar 18, 2023, 10:01 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியின் போது விராட் கோலியின் செய்த செயல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை வியக்க வைக்கும்படி இருந்துள்ளது.
 

விராட் கோலி ஃபண்ணி மூவ்மெண்ட்ஸ்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது.

விராட் கோலி ஃபண்ணி மூவ்மெண்ட்ஸ்

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டை 5 ரன்களுக்கு 2வது ஓவரிலேயே வீழ்த்தினார் முகமது சிராஜ். 

Tap to resize

விராட் கோலி ஃபண்ணி மூவ்மெண்ட்ஸ்

அதன்பின்னர் மிட்செல் மார்ஷும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர். ஸ்மித் 22 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நோக்கி ஆடிய மிட்செல் மார்ஷ் 81 ரன்களுக்கு ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார். 

விராட் கோலி ஃபண்ணி மூவ்மெண்ட்ஸ்

லபுஷேனும் 15 ரன்களில் குல்தீப் யாதவின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சீட்டுக்கட்டாய் சரிந்தது. ஜோஷ் இங்லிஸ்(26), கேமரூன் க்ரீன்(12), ஸ்டோய்னிஸ்(5) ஆகிய மூவரும் ஷமியின் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர்.

விராட் கோலி ஃபண்ணி மூவ்மெண்ட்ஸ்

மேக்ஸ்வெல் 8 ரன்னுக்கு ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழக்க, சீன் அபாட்(0) மற்றும் ஆடம் ஸாம்பா(0) ஆகிய இருவரும் டக் அவுட்டாக, 35.4 ஓவரில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.

விராட் கோலி ஃபண்ணி மூவ்மெண்ட்ஸ்

இதில், 12.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, அடுத்த 59 பந்துகளில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் எடுத்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2ஆவது முறையாக இந்திய அணிக்கு எதிராக குறைந்தபட்ச ரன் எடுத்துள்ளது.

விராட் கோலி ஃபண்ணி மூவ்மெண்ட்ஸ்

இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக 159 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், இந்தப் போட்டியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு தனியாக டான்ஸ் ஆடினார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

விராட் கோலி ஃபண்ணி மூவ்மெண்ட்ஸ்

அதுமட்டுமின்றி, கால்பந்து வீரர் கிறிஸிடியானோ ரொனால்டோ மாதிரி இமிடேட் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விராட் கோலி மாதிரி கேலி, கிண்டல் செய்வதற்கு அவரை விட்டால் வேறும் யாரும் இல்லை. அந்தளவிற்கு விமர்சிக்க கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி ஃபண்ணி மூவ்மெண்ட்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார். இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.
 

Latest Videos

click me!