கவுதம் கம்பீர் சொன்ன 'அந்த' வார்த்தை! ஓடிஐயில் இருந்தும் விராட் கோலி, ரோகித் சர்மா விரைவில் ஓய்வு?

Published : Aug 10, 2025, 04:38 PM IST

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓடிஐயில் இருந்தும் விரைவில் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கும் கவுதம் கம்பீர் கொடுத்த அழுத்தம் என்ன? என்பது குறித்து பார்ப்போம். 

PREV
14
Virat Kohli and Rohit Sharma Likely To Retire From ODI

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலியும் ரோகித் சர்மாவும் டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இருப்பினும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் ஒருநாள் போட்டிக்கான கனவை வேட்டு வைக்கும் விதமாக பிசிசிஐ ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை சொல்லியுள்ளது.

24
விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ வைத்த செக்

அதாவது பிசிசிஐ 2027 உலகக் கோப்பைக்காக இந்திய அணியை இப்போதே தயார் செய்து வருகிறது. அந்த அணி இளம் வீரர்களை கொண்டதாக இருக்க வேண்டும் என பிசிசிஐ கருதுகிறது. விராட் மற்றும் ரோகித் சர்மா அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், இளம் வீரர்களை கருத்தில் கொண்டு இவர்கள் இருவரையும் அணியில் சேர்க்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கவுதம் கம்பீர் வைத்த நிபந்தனை

மேலும் ஒருநாள் அணியில் தொடர வேண்டுமானால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும் விஜய் ஹசாரே டிராபியில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் கவுதம் கம்பீர் அவர்களிடம் நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தேர்வாக கடந்த சீசன் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும் என்றும் பிசிசிஐ அறிவுறுத்தியது. அதன்படி ரஞ்சி டிராபியில் விளையாடிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதன்பிறகு பிசிசிஐ கொடுத்த அழுத்தம் காரணமாக் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.

34
ஆஸ்திரேலியா தொடர் தான் கடைசி

ரோகித் சர்மா, விராட் கோலி அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர். இப்போது பிசிசிஐ மற்றும் கவுதம் கம்பீர் பல நிபந்தனைகளை வைத்துள்ளதால் இருவரும் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

ஆஸ்திரேலியா தொடர் தான் அவர்களின் கடைசி தொடராக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. விராட் கோலி இதுவரை 2011, 2015, 2019, 2023 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளார், ரோகித் சர்மா 2015, 2019, 2023 உலகக் கோப்பை அணிகளில் இடம்பெற்றுள்ளார்.

44
ஸ்டார் கலாசாரத்தை புறக்கணிக்கும் கம்பீர்

கவுதம் கம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் இந்திய அணியில் நட்சத்திர கலாச்சாரத்தை நீக்க விரும்புவதாக பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து தொடரில் 3 போட்டிகள் மட்டும் தான் விளையாடுவேன் என ஜஸ்பிரித் பும்ரா வைத்த நிபந்தனையால் பிசிசிஐ அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனால் இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் இனி தங்களுக்கு விருப்பமான போட்டிகளை மட்டும் தேர்வு செய்து விளையாட முடியாது என்றும், ஒரு டெஸ்ட் தொடரில் இடம்பெற்றால் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் எனவும் பிசிசிஐ புதிய விதிமுறையை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories