ஷாக் கொடுக்கும் பிட்ச் ரேட்டிங்! இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு பிட்ச் மட்டுமே சிறந்தது!

Published : Aug 08, 2025, 08:50 PM IST

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நான்கு பிட்ச்களின் மதிப்பீடுகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஹெடிங்லே மைதானம் மட்டுமே 'மிகவும் சிறந்தது' என்ற மதிப்பீட்டைப் பெற்றுள்ளது, மற்ற மூன்று பிட்ச்களும் 'திருப்திகரமானவை' என்று மதிப்பிடப்பட்டுள்ளன.

PREV
14
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆண்டர்சன்-சச்சின் டெண்டுல்கர் கோப்பை தொடர், கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் பரபரப்பான தொடர்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், அனைத்துப் போட்டிகளும் இறுதி நாள் வரை சென்ற நிலையில், இரு அணிகளும் 2-2 என சமன் செய்துள்ளன. லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

24
ஒரே ஒரு நல்ல பிட்ச்

இந்தத் தொடரில் பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் சமமாகப் போராடினர். முதல் சில நாட்களில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஆட்டம் செல்லச் செல்ல பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினர். எனவே, இந்தத் தொடருக்குத் தயார் செய்யப்பட்ட பிட்சுகள் பலரின் பாராட்டுகளைப் பெற்றன. ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) மதிப்பீட்டில், அனைத்துப் பிட்சுகளும் சிறந்ததாகக் கருதப்படவில்லை.

ஐ.சி.சி.யின் பிட்ச் மதிப்பீடுகள் ஐ.சி.சி. வெளியிட்டுள்ள முதல் நான்கு போட்டிகளுக்கான பிட்ச் மதிப்பீடுகளில், முதல் டெஸ்ட் போட்டி நடந்த ஹெடிங்லே மைதானம் மட்டுமே 'மிகவும் சிறந்தது' (Very Good) என்ற மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. மற்ற மூன்று போட்டிகளுக்கான பிட்சுகள் 'திருப்திகரமானது' (Satisfactory) என்று மதிப்பிடப்பட்டுள்ளன.

34
பிட்ச் மற்றும் அவுட்பீல்ட் மதிப்பீடு

முதல் டெஸ்ட் - ஹெடிங்லே, லீட்ஸ்:

பிட்ச் மதிப்பீடு: மிகவும் சிறந்தது | அவுட்பீல்ட் மதிப்பீடு: மிகவும் சிறந்தது.

இரண்டாவது டெஸ்ட் - எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்:

பிட்ச் மதிப்பீடு: திருப்திகரமானது

அவுட்பீல்ட் மதிப்பீடு: மிகவும் சிறந்தது.

மூன்றாவது டெஸ்ட் - லார்ட்ஸ், லண்டன்:

பிட்ச் மதிப்பீடு: திருப்திகரமானது

அவுட்பீல்ட் மதிப்பீடு: மிகவும் சிறந்தது.

நான்காவது டெஸ்ட் - ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்:

பிட்ச் மதிப்பீடு: திருப்திகரமானது

அவுட்பீல்ட் மதிப்பீடு: மிகவும் சிறந்தது.

கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டிக்கான மதிப்பீடு இன்னும் வெளியாகவில்லை.

44
சுவாரசியமான டெஸ்ட் தொடர்

இந்த டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது இரு நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களைத் திருப்தி அடைய வைத்துள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு போட்டியும் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் உணர்வுபூர்மானதாக அமைந்தது. முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா இதுபற்றி பேசுகையில், "இது மிகவும் சவாலான தொடர். ஐந்து போட்டிகளும் கடைசி நாள் வரை சென்றன. இது ஆட்டத்தின் தரத்தைக் காட்டுகிறது," என்று தெரிவித்தார். இந்தத் தொடர், வீரர்களின் அபாரமான ஆட்டத்துடன் பல சுவாரசியமான தருணங்கள் நிறைந்தாக இருந்தது. காயங்களுக்கு மத்தியிலும் விளையாடிய உறுதியுடன் விளையாடிய வித்ததால் இந்தத் தொடர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories