சிஎஸ்கே வீர்ர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் 2026 சீசனில் விளையாடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் அடுத்த ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு அணியிலிருந்து விடுவிக்குமாறு சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரை வாங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இப்போது அஸ்வின் குறித்த தகவலும் கசிந்துள்ளன.
24
பல காலம் சிஎஸ்கேக்காக விளையாடிய அஸ்வின்
கடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து 9.75 கோடி ரூபாய்க்கு தனது முதல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அஸ்வின் திரும்பினார். 2009 முதல் 2015 வரை சென்னை அணிக்காக விளையாடிய அஸ்வின், பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்தார்.
சென்னை அணியுடனேயே தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தான் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பினார் என்று கூறப்படுகிறது. ஆனால், கடந்த சீசனில் ஒன்பது போட்டிகளில் விளையாடிய அஸ்வின் ஏழு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்.
34
ஐபிஎல்லில் அசத்திய அஸ்வின்
ஐபிஎல் தொடருக்குப் பிறகு தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடிய அஸ்வின் மீது பந்துவீச்சில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அது தவறு என்று பின்னர் தெரியவந்தது. கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காகவா சென்னை அணியிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐபிஎல் போட்டிகளில் 221 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது எதிர்பாராத விதமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அஸ்வினின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அஸ்வின் சென்னை அணியை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தான் அணி முடிவு என்ன?
மினி ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்கள் டிரேட் முறை மூலம் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு வெளியேற அல்லது மினி ஏலத்தில் பங்கேற்கும் வகையில் அணியில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை விடுவிக்காது என்றே தகவல்கள் கூறுகின்றன.