நரைத்த தாடி, மீசையுடன் விராட் கோலியின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதிய தோற்றம் தொடர்பாக ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, லண்டனில் இருந்து வெளியான ஒரு புதிய புகைப்படத்தால் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். விளையாட்டு மைதானத்தில் ஆற்றல்மிக்க வீரராக வலம் வரும் விராட் கோலியின் புதிய தோற்றம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் லண்டனில் தனது நண்பர் ஷாஷ் கிரணுடன் கோலி இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
24
நரைத்த தாடி, மீசையுடன் விராட் கோலி
நரைத்த தாடி, மீசையுடன் வயதான கோலியைப் போலவே அவர் காட்சியளிக்கிறார்.கடந்த மாதம் யுவராஜ் சிங் புற்றுநோய் அறக்கட்டளையான யுவிகானின் நிகழ்ச்சிக்காக வந்தபோதுதான் கோலியை ரசிகர்கள் பொதுவெளியில் கண்டனர். இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடைபெற்றபோது லண்டனில் இருந்தபோதிலும், எந்தப் போட்டியையும் காண கோலி வரவில்லை.
கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை
இப்போது தாடி மற்றும் தலைமுடியின் சில பகுதிகளில் வெள்ளை முடிகள் அதிகம் காணப்படுவதால் விராட் கோலியின் தோற்றம் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. விராட் கோலியின் வயதுக்கு ஏற்ப முடி நரைப்பது இயல்பு என்றாலும் ''திடீரென்று ஏன் இவ்வளவு நரை" என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். தாடியை ஷேவ் செய்து பழைய கிங் கோலியாக வலம் வரும்படி அவருக்கு ர்சிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
34
ஓய்வு பெற போகிறாரா?
சில ரசிகர்கள், இந்தத் தோற்ற மாற்றம் அவரது ஓய்வு முடிவுகளைக் குறிக்கிறதோ என்ற கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு ரசிகர், "ஓய்வு எடுப்பதற்கான அறிகுறி தெரிகிறது" என்று கருத்து தெரிவித்துள்ளார். ஒரு சிலர் உடல்நலன் குறித்து அக்கறையுடன் கேள்விகளை எழுப்பியுள்ளனர். "தாடி திடீரென்று ஏன் இவ்வளவு நரைத்து விட்டது? உடல்நிலை சரியில்லையா கோலி?''என்று அக்கறையுடன் விசாரித்து வருகின்றனர்.
டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கான காரணத்தை விராட் கோலி அண்மையில் தெளிவுபடுத்தினார். நான்கு நாட்களுக்கு ஒருமுறை தாடியை கருப்பாக்க வேண்டியிருந்தால், ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கோலி நகைச்சுவையாக அவர் கூறியிருந்தார். மொத்தத்தில் கோலியின் இந்தப் புதிய தோற்றம் அவரது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது