ஆசியக் கோப்பை 2025! நம்பர் 1 பவுலருக்கு சிக்கல்! தமிழக வீரருக்கு வாய்ப்பு! இந்திய அணி வீரர்கள் லிஸ்ட்!

Published : Aug 06, 2025, 10:59 PM IST

ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்தியாவின் நம்பர் 1 பவுலர் விளையாடுவதில் சிக்கல் உள்ளது. அதே வேளையில் தமிழ்நாடு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

PREV
16
Asia Cup 2025 Indian Team Squad

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) செப்டம்பர் 9ம் தேதி முதல் 28 வரை நடைபெற உள்ளது. டி20 வடிவில் போட்டிகள் நடைபெற உள்ளன. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான குரூப் சுற்றுப் போட்டி, செப்டம்பர் 14 அன்று துபாயில் நடைபெறுகிறது. ஆசியக்கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

26
பும்ரா மீண்டும் அணிக்கு வருவாரா?

இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. அவரது பணிச்சுமை மற்றும் உடற்தகுதி குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. உடற்தகுதி பெற்றால், ஆசியக் கோப்பையில் இந்திய அணியில் மீண்டும் இடம் பெறலாம். ஆனால், தொடரின் தொடக்கத்திலிருந்தே அவர் விளையாடுவாரா என்பது சந்தேகமே.

36
ஆசியக் கோப்பை அணியில் சுப்மன் கில்

இங்கிலாந்து தொடரில் 750க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தார் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில். இந்தச் சிறப்பான ஆட்டத்திற்குப் பின், ஆசியக் கோப்பை அணியில் அவர் இடம் பெறுவது உறுதி. அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாகவும்சிறப்பாக செயல்பட்டார். எனவே, டி20 வடிவிலான இந்திய அணியிலும் இடம் பெறலாம்.

46
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெறுவாரா?

இங்கிலாந்து தொடரின் தொடக்கத்தில் சதம் அடித்தார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். தொடரின் நடுவில் சற்று தடுமாறினாலும், ஓவல் மைதானத்தில் நடந்த தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து, மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார்.  இந்தச் சிறப்பான ஆட்டத்திற்குப் பின், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறலாம். வேகமாக ரன்கள் எடுக்கும் திறன் கொண்டவர். எனவே, டி20 அணியில் எளிதில் இடம் பெற வேண்டும்.

56
சாய் சுதர்சன் இடம் பெற வாய்ப்பு

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன். இஅவர் அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார். எனவே, டி20 வடிவிலான ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளன.

66
முகமது சிராஜும் களமிறங்குகிறார்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இங்கிலாந்து தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஓவல் டெஸ்டில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்த பின், ஆசியக் கோப்பை அணியில் சிராஜ் இடம் பெறுவது உறுதியாகி விட்டது. டி20 பார்மட்டில் இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளராக சிராஜ் இருப்பார். அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால், அனைத்து தொடர்களிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories