அடேங்கப்பா! சுப்மன் கில் அணிந்த ஜெர்சி இத்தனை லட்சத்துக்கு ஏலம் போனதா? அப்படி என்ன ஸ்பெஷல்?

Published : Aug 10, 2025, 03:58 PM IST

இங்கிலாந்து தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில் அணிந்திருந்த ஜெர்சி பல லட்சங்களுக்கு ஏலம் போனது. இது தொடர்பான முழு விவரஙகளை இந்த செய்தியில் பார்ப்போம்.

PREV
14
Shubman Gill Jersey Auctioned For Rs.5.41 lakhs

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் டிரா செய்து சாதனை படைத்தது. சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட அணியே இங்கிலாந்து சென்றது. இதனால் இங்கிலாந்து அணி எளிதாக தொடரை வெல்லும் என பலரும் கணித்த நிலையில், இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தொடரை சமன் செய்தனர். இந்திய அணி தொடரை வெல்ல முக்கிய காரணம் கேப்டன் சுப்மன் கில் தான்.

24
சுப்மன் கில் ஜெர்சி ரூ.5.41 லட்சத்துக்கு ஏலம்

பேட்டிங் மட்டுமின்றி கேப்டன்சியிலும் அவர் அசத்தினார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் சுப்மன் கில் அணிந்திருந்த ஜெர்சி ரூ.5.41 லட்சத்துக்கு ஏலம் போனது. ரூத் ஸ்ட்ராஸ் அறக்கட்டளைக்கான நிதி திரட்டும் விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஏலத்தில் இந்தியா - இங்கிலாந்து வீரர்களின் ஜெர்சிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. லார்ட்ஸ் டெஸ்டில் பயன்படுத்தப்பட்ட ஜெர்சிகள், தொப்பிகள், படங்கள், மட்டைகள் உள்ளிட்டவை ஏலத்தில் வைக்கப்பட்டன.

34
பும்ரா, ஜடேஜா ஜெர்சி

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், புற்றுநோயால் இறந்த தனது மனைவி ரூத் ஸ்ட்ராஸின் நினைவாக ரூத் ஸ்ட்ராஸ் அறக்கட்டளையைத் தொடங்கினார். இவற்றில் அனைத்து வீரர்களின் கையெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் ஜெர்சிகள் ரூ.4.94 லட்சத்துக்கு விற்பனையாயின. அதே வேளையில் கில்லின் ஜெர்சி ரூ.5.41 லட்சத்துக்கு ஏலம் போனது.

இங்கிலாந்து தொடரில் அசத்திய சுப்மன் கில்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர் சுப்மன் கில் தான். மொத்தம் 754 ரன்கள் எடுத்தார். ஆனாலும் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை முறியடிக்க கில்லால் முடியவில்லை. அதேசமயம், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமையை கில் பெற்றார். சுனில் கவாஸ்கரின் சாதனையை அவர் முறியடித்தார்.

44
முதல் கேப்டனாக சாதனை

மேலும் இங்கிலாந்து தொடரில் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். சேனா (SENA) நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் முதல் இரட்டை சதம் அடித்த ஆசிய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும் இங்கிலாந்து மண்ணில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories