இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கும் இடையே மோதல் மூண்டது. 13வது ஓவரை வீசிய முகமது சிராஜ், அந்த ஓவரை பவுன்ஸருடன் முடிக்க, சிராஜிடம் ஏதோ சொல்லி சீண்டினார் பென் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சிராஜ் அங்கிருந்து நகர, சண்டைக்காகவே காத்திருக்கும் கோலி சும்மாவிடுவாரா? சிராஜை சீண்டிவிட்டு, தனது பேட்டிங் பார்ட்னர் பேர்ஸ்டோவிடம் பேசிக்கொண்டிருந்த ஸ்டோக்ஸை விராட் விளாச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைக்கண்ட அம்பயர்கள் நிதின் மேனன் மற்றும் வீரேந்தர் ஷர்மா ஆகியோர் தலையிட்டு, அவர்களை விலக்கிவிட்டனர்.