இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை வெறும் 5 ரன்னுக்கு எல்பிடபிள்யூ செய்து சிராஜ் வெளியேற்ற, பேர்ஸ்டோவும் 28 ரன்னுக்கு சிராஜின் பந்தில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸ், அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். கடந்த போட்டியில் செய்த தவறிலிருந்து பாடம் கற்ற ஸ்டோக்ஸ், இந்திய ஸ்பின்னர்களை திறம்பட கையாண்டு அரைசதம் அடித்தார். ஆனால் அவரால் பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை. ஸ்டோக்ஸை 55 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த, ஆலி போப்(29) மற்றும் பென் ஃபோக்ஸ்(1) ஆகிய இருவரையும் அஷ்வின் வீழ்த்த, சிறப்பாக ஆடிய லாரன்ஸை 46 ரன்னில் அக்ஸர் படேல் வீழ்த்தினார்.