”மாடர்ன் டே ஹீரோ” விராட் கோலி..! ஸ்டீவ் வாக் புகழாரம்

First Published Mar 2, 2021, 2:59 PM IST

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மாடர்ன் டே ஹீரோ என ஆஸி., முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்துவருகிறார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, 3 விதமான போட்டிகளிலும் பேட்டிங் அபாரமாக ஆடுவதுடன், ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்துவருகிறார்.
undefined
32 வயதே ஆன விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அதற்குள்ளாக 70 சதங்கள் மற்றும் 110 அரைசதங்களுடன் 20,000க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழும் விராட் கோலி, டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தரவரிசையிலும் டாப் 10 இடங்களுக்குள் இருக்கிறார்.
undefined
விராட் கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறை, வெற்றி வேட்கை ஆகியவை எல்லாம் ஒரு கேப்டனாக அதே வேகத்தை வீரர்களிடமும் கடத்துகிறது. அதேபோல ஃபிட்னெஸிலும் அணி வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் கோலி, மொத்த அணியும் ஃபிட்னெஸுடன் திகழ முன்மாதிரியாக திகழ்கிறார்.
undefined
இந்நிலையில், விராட் கோலியை மாடர்ன் டே ஹீரோ என்று ஆஸி., முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் புகழாரம் சூட்டியுள்ளார். கோலி குறித்து பேசிய ஸ்டீவ் வாக், விராட் கோலி இந்தியாவின் புதிய ஆட்டிடியூடின் முகமாக திகழ்கிறார். விராட் கோலியை அதனால்தான் அனைவரும் விரும்புகிறார்கள். எதையும் சாதிக்கும் நேர்மறையானவர். விராட் கோலி மாடர்ன் டே ஹீரோ என்று ஸ்டீவ் வாக் புகழாரம் சூட்டியுள்ளார்.
undefined
click me!