ஹர்பஜன் - அஷ்வின் இருவரில் யார் பெஸ்ட் ஆஃப் ஸ்பின்னர்..? மழுப்பாமல் ஓபனா பதில் சொன்ன கம்பீர்

First Published Mar 2, 2021, 2:19 PM IST

ஹர்பஜன் சிங் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரில் யார் பெஸ்ட் ஆஃப் ஸ்பின்னர் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், 400 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். கபில் தேவ், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகிய மூவருக்கு அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டிய 4வது இந்திய பவுலர் அஷ்வின் ஆவார். 400 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை வெறும் 77 போட்டிகளில் எட்டிவிட்டார்.
undefined
அஷ்வினுக்கு முந்தைய காலக்கட்ட இந்திய அணியின் டாப் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங். ஹர்பஜன் சிங் 15 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சினார். மிகப்பெரிய ஜாம்பவான் பவுலரான ஹர்பஜன் சிங், டெஸ்ட் கிரிக்கெட்டில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 103 போட்டிகளில் ஆடி அவர் 417 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தனது அபாரமான சுழலின் மூலம் இந்திய அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் ஹர்பஜன் சிங். முன் ஹர்பஜன் சிங் செய்ததை, இப்போது அஷ்வின் சிறப்பாக செய்துவருகிறார்.
undefined
இருவருமே சிறந்த ஸ்பின்னர்கள் தான் என்றாலும், இருவர் குறித்த ஒப்பீட்டை தவிர்க்கமுடியாது. ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவில் பேசிய கம்பீரிடம், ஹர்பஜன் - அஷ்வின் ஆகிய இருவரில் யார் சிறந்த ஸ்பின்னர் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
undefined
அதற்கு பதிலளித்த அஷ்வின், வெவ்வேறு காலக்கட்ட வீரர்களை ஒப்பிடமுடியாது. ஹர்பஜன் ஆடிய காலக்கட்டத்தில் அவர் சிறந்த ஸ்பின்னர். இப்போது அஷ்வின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர். ஹர்பஜன் சிங் ஆடிய காலத்தில் டி.ஆர்.எஸ் எல்லாம் கிடையாது. அப்போதைய ஆடுகளங்களின் கண்டிஷனும் வேறு.
undefined
ஆனால் அதேவேளையில், ஹர்பஜன் சிங் தூஸ்ரா வீசினார். இப்போது ஆஃப் ஸ்பின்னர்கள் தூஸ்ரா வீச அனுமதிக்கப்படவில்லை என்பதால் அஷ்வினால் தூஸ்ரா வீசமுடியாது. அஷ்வினிடம் நிறைய வேரியேஷன் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒரு பேக்கேஜாக பார்த்தால், முழுக்க முழுக்க பவுலர் பார்வையில் அஷ்வின் சற்று சிறந்தவர் எனலாம் என்று கம்பீர் தெரிவித்தார்.
undefined
click me!