ரோஹித் சர்மா ஆடியதை பாருங்க..! மாற்ற வேண்டியது பிட்ச்சை இல்ல; உங்க மைன்ட்செட்டை..! கவாஸ்கர் அதிரடி

First Published Mar 1, 2021, 4:00 PM IST

அகமதாபாத் ஆடுகளத்தை இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்துவரும் நிலையில், அது பேட்டிங் ஆட ஏற்ற பிட்ச் தான் என்பதை ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை மேற்கோள் காட்டி பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
 

இந்தியா இங்கிலாந்து இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டி, 2ம் நாளே முடிந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி, 2ம் நாளே முடிந்தது அனைவருக்கும் வியப்பளித்தது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தினர்.
undefined
இந்திய அனியின் இடது கை ஸ்பின்னர் அக்ஸர் படேல், 11 விக்கெட்டுகளையும், சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் 7விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி கேப்டனும் ஆஃப் ஸ்பின்னருமான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் மொத்தம் 30 விக்கெட்டுகள் விழுந்தன. அதில் 28 விக்கெட்டுகள் ஸ்பின்னர்கள் வீழ்த்தியவை.
undefined
இதையடுத்து, மைக்கேல் வான், டேவிட் லாயிட் உள்ளிட்ட பல இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் அகமதாபாத் ஆடுகளத்தை விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில், அகமதாபாத் ஆடுகளம் குறித்து பேச தகுதி வாய்ந்த ரோஹித் சர்மா, அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். யாருமே சரியாக ஆடாத அகமதாபாத் பிட்ச்சில் தான் ரோஹித்தும் ஆடினார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த(66) ரோஹித் சர்மா, 2வது இன்னிங்ஸில் 25 ரன்கள் நாட் அவுட். 2 இன்னிங்ஸ்களிலுமே நன்றாக ஆடினார் ரோஹித் சர்மா. பிட்ச் சரியில்லை என்றால் ரோஹித் மட்டும் எப்படி நன்றாக ஆடினார்? எனவே நன்றாக ஆடி ஸ்கோர் செய்வதும் செய்யாததும் பேட்ஸ்மேன்களின் கையில் தான் உள்ளது.
undefined
அதைச்சுட்டிக்காட்டித்தான் கவாஸ்கர் பேசியுள்ளார். அகமதாபாத் பிட்ச் குறித்து பேசியுள்ள கவாஸ்கர், அகமதாபாத் பிட்ச்சில் எந்த குறையும் இல்லை. அச்சுறுத்தும் விதமான பவுன்ஸ் எல்லாம் ஆகவில்லை. பந்து சுழலுக்கு சாதகமாக திரும்பியது. ஆனால் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பவர், திரும்பும் மற்றும் நேராக வரும் வித்தியாசமான பந்துகளை எதிர்கொண்டு ஆடும் திறன் பெற்றிருக்க வேண்டும். அகமதாபாத் டெஸ்ட்டில் விழுந்த விக்கெட்டுகளில் அவுட்டான பேட்ஸ்மேன்களின் பங்களிப்பும் தான் உள்ளது.
undefined
இந்த மாதிரியான பிட்ச்களில் ஆடும்போது, பிட்ச்சைவிட பேட்ஸ்மேன்களின் மனநிலைதான் முக்கியம். ரோஹித் சர்மா 2 இன்னிங்ஸ்களிலுமே அபாரமாக பேட்டிங் ஆடி ஸ்கோர் செய்தார். எனவே அந்த ஆடுகளம் நன்றாக ஸ்கோர் செய்வதற்கு ஏற்ற ஆடுகளம் தான் என்பது தெரிகிறது என்று கவாஸ்கர் தெரிவித்தார்.
undefined
click me!