Virat Kohli Wedding Day: கேக் வெட்டி 6ஆவது ஆண்டு திருமணநாளை கொண்டாடிய விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஜோடி!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி இருவரும் நேற்று இரவு லண்டனில் தங்களது 6ஆவது ஆண்டு திருமணநாளை கொண்டாடியுள்ளனர்.

Virat Kohli and Anushka Sharma Wedding Day Celebration

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி நேற்று தங்களது 6ஆவது ஆண்டு திருமணநாளை கொண்டாடியுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடியை Ideal Couple – சிறந்த ஜோடி என்று சொன்னால் தவறில்லை.

Anushka Sharma Wedding Day Celebration

கடந்த 2013 ஆம் ஆண்டு ஷாம்பு விளம்பரத்தின் மூலமாக இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துள்ளனர். இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். விராட் கோலி விளையாடும் போட்டிகளில் எல்லாம் அனுஷ்கா சர்மா நேரில் வந்து பார்த்து ரசித்துள்ளார்.


Virat Kohli Wedding Day Celebration

கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த ஜனவரி 2021ல் இந்த ஜோடிக்கு வாமிகா என்ற மகள் பிறந்தாள். திருமணத்திற்கு முன்பு காதலித்ததை விட திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர்.

Virat Kohli and Anushka Sharma Wedding Anniversary

தற்போது லண்டனில் இருக்கும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து தங்கள்து 6ஆவது ஆண்டு திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழந்துள்ளனர்.

Anushka Sharma 6th Year Wedding Anniversary

நேற்று இரவு 11.33 மணியளவில் கேக் வெட்டி கல்யாணநாளை கொண்டாடியுள்ளனர். இன்று காலை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அதில் லவ் மற்றும் இன்பினிட்டி குறியீடை பதிவிட்டுள்ளார்.

Virat Kohli 6th Year Wedding Anniversary

இதே போன்று விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவை கட்டியணைத்திருப்பது போன்று புகைப்படத்தை பகிர்ந்து லவ் மற்றும் இன்பினிட்டி குறியீடை பதிவிட்டுள்ளார். Virat Kohli Anushka Sharma Wedding Day: 6ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஜோடி!
 

Virat Kohli and Anushka Sharma

அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்பு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் நிறைந்த ஒருநாளாக இன்றைய நாள் நிறைந்துள்ளது. 6ஆவது திருமணநாளை குறிக்கும் வகையில் 6+ என்று பதிவிட்டு இன்பினிட்டி குறியீடை பதிவிட்டு 6+♾️ of ❤️ with my numero uno 🥰 என்று குறிப்பிட்டுள்ளார்.

6th Year Wedding Anniversary Celebration

விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சாக்லேட் கேக் வெட்டுவதைக் காணும் அவர்களின் திருமண ஆண்டு கொண்டாட்டத்தின் சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்கள் அனுஷ்காவின் சகோதரர், தயாரிப்பாளர் கர்னேஷ் ஷர்மா, நடிகை சகாரிகா காட்கே மற்றும் நகைச்சுவை நடிகர் அபிஷேக் உப்மன்யு ஆகியோரும் இந்த திருமணநாள் கொண்டாட்டத்தில் இடம் பெற்றனர்.

Latest Videos

click me!