SA vs IND 2nd T20:மனைவியுடன் தென் ஆப்பிரிக்காவில் வலம் வரும் புது மாப்பிள்ளை முகேஷ் குமார் – வைரலாகும் வீடியோ!

Published : Dec 12, 2023, 10:39 AM IST

மனைவி திவ்யா சிங்குடன் தென் ஆப்பிரிக்கா சென்ற முகேஷ் குமாரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
16
SA vs IND 2nd T20:மனைவியுடன் தென் ஆப்பிரிக்காவில் வலம் வரும் புது மாப்பிள்ளை முகேஷ் குமார் – வைரலாகும் வீடியோ!
Mukesh Kumar Wedding

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கடந்த 10 ஆம் தேதி டர்பனில் நடக்க இருந்தது. Team India Travel From Durban to Gqeberha

26
SA vs IND 2nd T20

ஆனால், டர்பனில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் டாஸ் போட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடக்க இருக்கிறது.

36
India Tour of South Africa

இதற்காக இந்திய அணி வீரர்கள் டர்பனிலிருந்து கியூபெர்காவிற்கு விமானம் மூலமாக புறப்பட்டுச் சென்றனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவில் ராகுல் டிராவிட், ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, முகமது சிராஜ், ரிங்கு சிங் ஆகியோர் காணப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து புதிதாக திருமணமான முகேஷ் குமார் தனது மனைவி திவ்யா சிங்குடன் வலம் வந்தார்.

46
Mukesh Kumar Wedding

அதன் பிறகு குல்தீப் யாதவ், இஷான் கிஷான், ரவி பிஷ்னோய் ஆகியோரும் வந்தனர். டர்பனிலிருந்து புறப்பட்டுச் சென்ற இந்திய அணியினருக்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகேஷ் குமார் இடம் பெற்றுள்ளார்.

56
Mukesh Kumar

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று விளையாடினார். இதில், 3ஆவது டி20 போட்டியில் அவர் இடம் பெறவில்லை. அப்போது அவருக்கு திருமணம் என்பதால், அவர் சென்றுள்ளதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார். கடந்த மாதம் 29 ஆம் தேதி முகேஷ் குமார் தனது காதலியான திவ்யா சிங்கை கரம் பிடித்துள்ளார்.

66
Mukesh Kumar with His Wife Divya Singh

திருமணம் முடிந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 மற்றும் 5ஆவது டி20 போட்டிகளில் இடம் பெற்று விளையாடினார். தற்போது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலும் இடம் பெற்றுள்ளார். இதில், அவர் தனது மனைவி திவ்யா சிங்குடன் வந்துள்ளார். இதனை நெட்டிசன்கள் பலரும் பிசிசிஐ செலவில் ஹனிமூன் டிரிப்பா என்று ஜாலியாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories