South Africa vs India 2nd T20I Gqeberha
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கடந்த 10 ஆம் தேதி டர்பனில் நடக்க இருந்தது.
SA vs IND 2nd T20 Rain
ஆனால், டர்பனில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் டாஸ் போட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடக்க இருக்கிறது.
SA vs IND
இந்தப் போட்டியிலும் மழை பெய்வதற்கு சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் போட்டி நடக்கும் கியூபெர்காவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க்கில் சராசரியாக 30 சதவிகிதம் வரையில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
South Africa vs India 2nd T20I
தென் ஆப்பிரிக்கா நேரப்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் 43 சதவிகிதம் முதல் 49 சதவிகிதம் வரையில் மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், தென் ஆப்பிரிக்கா நேரப்படி மாலை 6 மணிக்கு தான் போட்டி தொடங்குகிறது. அப்போது முதல் மழையின் அளவு படிப்படியாக குறைந்து இரவு 10 மணிக்கு 5 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SA vs IND 2nd T20I
இதன் காரணமாக இந்தப் போட்டியானது தாமதமாக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டாஸ் நிகழ்ச்சியும் சற்று தாமதமாக தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், போட்டியானது ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றே சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.