ICC Player Of The Month Award: நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது வென்ற டிராவிஸ் ஹெட்!

நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் வென்றுள்ளார்.

Australia - Travis Head

ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு ஐசிசி விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றது.

ICC Player Of the Month Award

இதில், இந்திய அணியில் முகமது ஷமி சிறந்து விளங்கினார். நியூசிலாந்திற்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி 7 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.


Travis Head

இதே போன்று ஆஸ்திரேலியாவில் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரையும் ஐசிசி பரிந்துரை செய்திருந்தது. டிராவிஸ் ஹெட்டின் சதத்தால் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தான் நவம்பர் மாதத்திற்கான சிறந்த விருதுக்கு முகமது ஷமி தான் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிராவிஸ் ஹெட் ஐசிசியின் சிறந்த வீரருக்கான நவம்பர் மாதத்திற்கான விருது வென்றுள்ளார்.

Latest Videos

click me!