டிராவிஸ் ஹெட் தனது அதிரடி சதத்தின் மூலம் அடிலெய்டு மைதானத்தில் தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்து வரலாறு படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 356 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி முதலில் 94/4 என தடுமாறிய நிலையில், உஸ்மான் கவாஜா (126 பந்துகளில் 82 ரன்கள், 10 பவுண்டரிகள்) மற்றும் அலெக்ஸ் கேரி இடையேயான 91 ரன் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவை சரிவில் இருந்து மீட்டது.
24
இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்
அலெக்ஸ் கேரி தனது முதல் ஆஷஸ் சதத்தை அடித்து, 143 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். ஸ்டார்க் (75 பந்துகளில் 54 ரன்கள்) சூப்பராக பேட்டிங் செய்ய ஆஸ்திரேலியா 371 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 168/8 என தத்தளித்தது. பென் ஸ்டோக்ஸ் (198 பந்துகளில் 83 ரன்கள்) மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் (105 பந்துகளில் 51 ரன்கள்) நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டனர். இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு ஆல்வுட்டாகி 85 ரன்கள் பின் தங்கியது.
34
டிராவிஸ் ஹெட் சதம்
பின்பு தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 271/4 ரன்கள் எடுத்தது. அதிரடியில் வெளுத்துக் கட்டி சூப்பர் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் 196 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 142 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.
அலெக்ஸ் கேரி அரை சதம் (91 பந்துகளில் 52 ரன்கள்) களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி 356 ரன்கள் முன்னிலை பெற்று உள்ள நிலையில், அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
டிராவிஸ் ஹெட் தனது அதிரடி சதத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்து வரலாறு படைத்துள்ளார்.முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்குப் பிறகு, அடிலெய்டில் ஜனவரி 2012 முதல் டிசம்பர் 2014 வரை தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் இவராவார்.
ராசியான சொந்த மைதானம்
டிராவிஸ் ஹெட் அடிலெய்டில் 2022-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக (175), 2024-ல் அதே அணிக்கு எதிராக (119) மற்றும் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக (140) சதங்கள் அடித்துள்ளார். இப்போது மற்றொரு சிறப்பான சதத்துடன், தனது சொந்த மைதானமான அடிலெய்டு ஓவலில் அற்புதமான சாதனையை தொடர்ந்து வருகிறார்.