ஐபிஎல் வரலாற்றில் இளம் வீரர்கள்: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வருகையால், பல இளம் வீரர்களுக்கு கிரிக்கெட்டில் தங்கள் திறமையை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி.. ஐபிஎல் போட்டிகளில் அசத்தி தேசிய அணியில் இடம் பிடிக்கின்றனர். இப்படி பல வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இளம் வயதிலேயே தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது மற்றொரு இளம் வீரர் ஐபிஎல் போட்டிகளில் காலடி எடுத்து வைத்துள்ளார். முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தியுள்ளார். அவர் தான் ஐபிஎல் 2025ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி. 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகி இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
2024 நவம்பரில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. லக்னோ அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் பந்திலேயே வைபவ் சிக்ஸர் அடித்தார். அவர் 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 34 ரன்கள் எடுத்தார். வைபவ் சூர்யவன்ஷி உள்பட ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய இளம் வீரர்கள் டாப் 5 பட்டியலை இங்கு காணலாம்.