CSKவில் இனி அஸ்வினுக்கு இடமில்லை? தோனியின் கறார் முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

Published : Apr 20, 2025, 12:58 PM IST

மும்பை வான்கடே மைதானத்தில் MI அணிக்கு எதிரான போட்டியில் CSKவின் பிளேயிங் 11ல் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இடம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
CSKவில் இனி அஸ்வினுக்கு இடமில்லை? தோனியின் கறார் முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா?
Ashwin

CSK Vs MI: நடப்பு ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு குறிப்பிடும் வகையில் வெற்றிகரமானதாக அமையவில்லை. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி வெற்றியோடு பயணத்தைத் தொடங்கினாலும் அடுத்தடுத்து தோல்வியே வசமானது. அடுத்தடுத்து 5 தோல்விகளை சந்தித்த நிலையில் CSK மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி கண்டு புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.
 

24
Ashwin

ஒவ்வொரு வெற்றியும் முக்கியம்

சென்னை அணி அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அடுத்து வரும் ஒவ்வொரு போட்டியும் சென்னை அணிக்கு முக்கியமானதாக இருக்கிறது. மேலும் கடந்த ஓரிரு போட்டியில் தான் சென்னை அணியின் சற்று நிலையான பிளேயிங் 11 செட்டானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கடந்த போட்டியில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறவில்லை.
 

34
Ashwin

வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் வான்கடே

இன்று நடைபெறும் போட்டி மும்பை வன்கடே மைதானத்தில் நடைபெறும் நிலையில், இந்த மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் சென்னை அணியில் அதிகபட்சமாக 2 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே இடம் இருக்கும். அந்த வகையில் விக்கெட் டேக்கிங்கில் முன்னணியில் உள்ள நூர் அகமது, ரவீந்திர ஜடேஜாவுக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
 

44
Ashwin

சென்னையின் பந்துவீச்சு

குறிப்பாக லக்னோ அணிக்கு எதிரான கடைசி போட்டியின் முடிவில் பேசிய தோனி, இந்த தொடரில் தற்போது தான் சென்னை அணிக்கு பந்து வீச்சு செட்டாகி இருப்பதாகக் கூறி விளக்கினார். அந்த போட்டியில் அஸ்வின் இடம்பெறவில்லை என்பது கூடுதல் தகவல். MIக்கு எதிரான போட்டியில் மட்டுமல்லாமல் இனி வரும் போட்டிகளிலும் அஸ்வினுக்கு அணியில் இடம் கிடைப்பது கஷ்டம் தான் என்று சொல்கிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories