8வது படிக்குற பையன் ஐபிஎல் ஆடுறான்! Vaibhav Suryavanshi குறித்து சுந்தர்பிச்சை போட்ட அதிரடி பதிவு

Published : Apr 20, 2025, 09:24 AM IST

ராஜஸ்தான் அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கி எதிரணியை மிரளவிட்ட வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்து கூகுள் CEO சுந்தர் பிச்சை தனது வியப்பை இணையத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.

PREV
15
8வது படிக்குற பையன் ஐபிஎல் ஆடுறான்! Vaibhav Suryavanshi குறித்து சுந்தர்பிச்சை போட்ட அதிரடி பதிவு
Vaibhav Suryavanshi

Vaibhav Suryavanshi: நடப்பு ஐபிஎல் தொடரில் LSG அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி இளம் புயலை களத்தில் இறக்கி வரலாற்றில் தடம் பதித்துள்ளது. ராஜஸ்தான், லக்னோ அணிகள் மோதிய போட்டி ஜெய்பூர் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 180 ரன்கள் சேர்த்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ராஜஸ்தான் அணி களம் இறங்கியது.

25
Vaibhav Suryavanshi

இம்பேக்ட் பிளேயர்

ராஜஸ்தான் அணியில் இம்பேக்ட் பிளேயராக களம் இறக்கப்பட்ட 14 வயதே நிரம்பிய வைபவ் சூர்யவன்ஷி IPL வரலாற்றிலேயே இளம் வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பேட்டிங்கைத் தொடங்கிய வைபவ் முதல் பந்திலேயே சிக்சர் பறக்கவிட்டு எதிரணியை வியப்பில் ஆழ்த்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய வைபவ் பவுண்டரி, சிக்சர்களைப் பறக்கவிட்டார்.
 

35
Vaibhav Suryavanshi

இணையத்தின் ஹாட் டாப்பிக்

20 பந்துகளை எதிர்கொண்ட இளம் வீரர் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசி 34 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதிரடியான ஆட்டத்தின் இடையே திடீரென ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு வெளியேறியபோது இளம் வீரர் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சியை ஏற்படுத்தியது. வெறும் 14 வயதில் ஐபில் விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வைபவ் தான் இணையத்தின் ஹாட் டாப்பிக்.
 

45
Vaibhav Suryavanshi

வியந்து பாராட்டிய கூகுள் CEO

இவரது விளையாட்டை பலரும் வியந்து பாராட்டும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையும் தனது பாராட்டை வெியிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இன்று அதிகாலை எழுந்தவுடன் 8வது படிக்கும் சிறுவன் ஐபிஎல் விளையாடியதைப் பார்த்தேன். என்னமாதிரியான அறிமுகம் இது” என்று தனது வியப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
 

55
Vaibhav Suryavanshi

போராடி தோல்வி

அதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், “14 வயதில் பேட்டிங் செய்ய வந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பெரிய விசில் அடிப்போம்” என்று கூறி தனது பாராட்டை பதிவிட்டுள்ளது. வைபவ் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் ராஜஸ்தான் அணி இறுதி ஓவர் வரை போராடி லக்னோ அணியிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Read more Photos on
click me!

Recommended Stories