பாகிஸ்தான் மற்றும் இலங்கை
பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன.
வங்கதேசம் மற்றும் இலங்கை
2ஆவது போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இதுவரையில் நடந்த ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியா 7 முறை சாம்பியனாகியுள்ளது.
பாகிஸ்தான் 2 முறை
இலங்கை 6 முறை சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது. பாகிஸ்தான் 2 முறை மட்டுமே சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
16ஆவது சீசன்
இந்த நிலையில், 16ஆவது சீசன் தொடங்க உள்ள நிலையில், இதுவரையில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளின் அடிப்படையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சச்சின் டெண்டுல்கர்:
அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். ஆசிய கோப்பை வரலாற்றில் 2 சதம், 7 அரைசதங்கள் உள்பட 971 ரன்கள் எடுத்துள்ளார்.
ரோகித் சர்மா:
ரோகித் சர்மா 22 போட்டிகளில் விளையாடி 745 ரன்கள் குவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார். அவர் ஒரு சதம், 6 அரைசதம் உள்பட 745 ரன்கள் எடுத்திருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா ஆசிய கோப்பையை கைப்பற்றினார்.
எம்.எஸ்.தோனி:
இந்த பட்டியலில் 3ஆவது இடத்தில் இருப்பவர் மகேந்திர சிங் தோனி. இவர், 19 போட்டிகளில் விளையாடி 648 ரன்கள் தோனி எடுத்துள்ளார். தோனி ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு சதம் 3 அரைசதங்கள் அடித்துள்ளார். அதோடு, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆசியக் கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்.
விராட் கோலி:
அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 4ஆவது இடத்தில் உள்ளார். அவர், 11 போட்டிகளில் விளையாடி 613 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 183 ரன்கள் எடுத்துள்ளார். இந்த தொடரில் விராட் கோலி 300 ரன்களுக்கு மேல் அடித்தால், அவர் முதல் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் காம்பீர்:
அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் கௌதம் காம்பீர் 5ஆவது இடத்தில் உள்ளார். இந்த தொடரில் அவர் மொத்தமாக 573 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஒரு சதமும், 5 அரைசதமும் அடங்கும். கடந்த 2010 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.