சர்வதேச நாய்கள் தினம்: செல்லப்பிராணிகளை அதிகம் நேசிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்!

First Published | Aug 26, 2023, 2:45 PM IST

சர்வதேச நாய்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எந்தெந்த கிரிக்கெட் வீரர்கள் செல்லப்பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டு தங்களது வீடுகளில் வளர்த்து வருகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

விராட் கோலி:

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிகளுக்கு நாய் என்றால் பிரியமாம். ஆரம்பத்தில் புரோனோ என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். தற்போது, டியூட் என்ற பெயர் கொண்ட நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்கள்.

எம்.எஸ்.தோனி:

எப்படி கார் மற்றும் பைக் மீது அதிக அன்பு வைத்திருக்கிறாரோ அதே அளவிற்கு தனது வளர்ப்பி பிராணிகள் மீது தோனி அதிக அன்பு வைத்திருக்கிறார். சமீபத்தில் தனது பிறந்தநாளின் போது செல்லப்பிராணிகள் உடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.

Tap to resize

சச்சின் டெண்டுல்கர்:

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வீட்டில் ஸ்பைக்கி மற்றும் மேக்ஸி என்று 2 நாய்களை வளர்த்து வருகிறார். தனது ஓய்வு நேரத்தை அவர்களுடன் செலவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கேஎல் ராகுல்:

கேஎல் ராகுலுக்கு நாய்கள் என்றால் பிரியமாம். அவர் சௌ-சௌ என்ற வகை கொண்ட வளர்ப்பு நாயை தத்தெடுத்துள்ளார். அதற்கு சிம்பா என்று பெயரிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் கே.எல்.ராகுலின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர் சிம்பா.

ரோகித் சர்மா:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா செல்லப்பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவர். அவர் முதலில் மேஜிக் என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.

ஹர்திக் பாண்டியா:

இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக இருப்பவர் ஹர்திக் பாண்டியா. இவரது தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தது. இதையடுத்து தற்போது ஹர்திக் பாண்டியா ஆசிய கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறார். இவர், லாசா அப்சோ என்ற வகை நாய்கள் 2 உள்ளன. அவர்களுக்கு ஆஸ்டன் மற்றும் பென்ட்லி என்று பெயரிட்டுள்ளார்.

Latest Videos

click me!