4ஆவது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் யார் யார்?

First Published | Aug 25, 2023, 1:27 PM IST

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த முதல் ஐந்து இந்திய வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க.

விராட் கோலி

ஆசிய கோப்பை 2023 மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்தடுத்து நடக்க உள்ளது. ஆனால், இந்திய அணியில் மிடில் ஆர்டரில் தான் பிரச்சனை ஏற்படுகிறது. சமீபத்திய போட்டிகளில், நம்பர் 4ல் களமிறங்கி எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை

கேஎல் ராகுல்

நம்பர் 4ல் களமிறங்கி விளையாடும் பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் கடும் போட்டி போடுகின்றனர். இவர்களது வரிசையில் திலக் வர்மாவும் இடம் பெற்றிருக்கிறார்

Tap to resize

ஷ்ரேயாஸ் ஐயர்

ஆனால், அவர் 5 அல்லது 6ஆவது இடத்தில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு முன்னதாக இந்திய அணியில் 4ஆவது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முகமது அசாருதீன்

முகமது அசாருதீன் தனது வாழ்க்கையில் 142 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக நான்காவது இடத்தில் இருந்தார். அவர் 137 இன்னிங்ஸ்களில் 40.39 சராசரியில் 3 சதங்கள் மற்றும் 33 அரை சதங்களுடன் 4605 ரன்கள் எடுத்துள்ளார்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 113 ஒருநாள் போட்டிகளில் 35.25 சராசரியில் 6 சதங்கள் மற்றும் 17 அரைசதங்களுடன் 3384 ரன்கள் எடுத்துள்ளார். அவர் ஐந்து முறை டக் அவுட்டும் ஆகியிருக்கிறார்.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட் ஒருநாள் போட்டிகளில் 101 இன்னிங்ஸ்களில் நான்காவது இடத்தில் விளையாடி 35.45 சராசரியுடன் 2 சதம் மற்றும் 25 அரைசதம் உள்பட 3226 ரன்களை குவித்தார்.

திலீப் வெங்சர்க்கார்

திலீப் வெங்சர்க்கார் 71 இன்னிங்ஸ்களில் 16 அரைசதங்களுடன் 2138 ரன்கள் எடுத்தார். சுவாரஸ்யமாக, அவர் நான்காவது இடத்தில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் பெரும்பாலும் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக இன்னிங்ஸைத் தொடங்கினார். ஆனால் அவர் 61 இன்னிங்ஸ்களில் 4ஆவது இடத்தில் களமிறங்கி 4 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களுடன் 2059 ரன்கள் எடுத்துள்ளார்.

Latest Videos

click me!