ஓவர் நைட்டுல ஹீரோவான நிக்கோலஸ் பூரன் – 9 ஆவது முறையாக சாம்பியனான MI!

Published : Jul 31, 2023, 12:29 PM IST

அமெரிக்காவில் நடந்த முதல் மேஜர் லீக் கிரிக்கெட் 2023 போட்டியில் நீடா அம்பானியின் அணியான எம்.ஐ.நியூயார்க் அணி நிக்கோலஸ் பூரனின் அதிரடியால் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது.

PREV
18
ஓவர் நைட்டுல ஹீரோவான நிக்கோலஸ் பூரன் – 9 ஆவது முறையாக சாம்பியனான MI!
மேஜர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி 2023

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெறாத நிக்கோலஸ் பூரன் அமெரிக்காவில் நடந்து வந்த மேஜர் லீக் கிரிக்கெட் 2023 தொடரின் முதல் சீசனில் எம்.ஐ. நியூயார்க் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார்.

28
பூரன்

அமெரிக்காவில் கடந்த 13 ஆம் தேதி முதல் நேற்று வரையில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் நடந்தது. இதில், 6 அணிகள் இடம் பெற்று விளையாடின.

38
நிக்கோலஸ் பூரன் 137 ரன்கள் நாட் அவுட்

இதில் நீடா அம்பானியின் எம்.ஐ.நியூயார்க் அணியும் ஒன்று. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் எம்.ஐ.நியூயார்க் அணியும், சியாட்டில் ஓர்காஸ் அணியும் மோதின.

48
நிக்கோலஸ் பூரன்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற MI நியூயார்க் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூயார்க் சியாட்டில் அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார். அவர் 52 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.

58
எம்.ஐ நியூயார்க் சாம்பியன்

அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் சியாட்டில் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய நியூயார்க் அணியில் தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர் டக் அவுட்டிலும், ஷயான் ஜஹாங்கீர் 10 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

68
நீடா அம்பானியின் எம்.ஐ.நியூயார்க்

அதன் பிறகு தான் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் களமிறங்கி அதிரடியாக ஆடி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். அவர், 55 பந்துகளில் 10 பவுண்டரி, 13 சிக்சர்கள் உள்பட 137 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

78
மேஜர் லீக் கிரிக்கெட் 2023

இதன் மூலமாக நியூயார்க் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

88
MI நியூயார்க்

அதுமட்டுமின்றி அணியையும் வெற்றி பெறச் செய்துள்ளார். இந்த தொடர் மூலமாக மொத்தமாக மும்பை அணி 9 முறை சாம்பியனாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன், சாம்பியன்ஸ் லீக் டி20யில் 2 முறை சாம்பியன், மகளிர் பிரீமியர் லீக்கில் ஒரு முறையும், மேஜர் லீக் கிரிக்கெட்டில் ஒரு முறையும் மும்பை அணி சாம்பியனாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories