வினி ராமன் வளைகாப்பு நிகழ்ச்சி
கடந்த 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் கிளென் மேக்ஸ்வெல். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
வினி ராமன் வளைகாப்பு நிகழ்ச்சி
மேக்ஸ்வெல் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய வாழ் தமிழ் பெண்ணான வினி ராமனை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து 5 ஆண்டு காதல் வாழ்க்கைக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
வினி ராமன் வளைகாப்பு நிகழ்ச்சி
இவர்களது திருமணம் தமிழ் மற்றும் ஆஸ்திரேலிய முறைப்படி நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து கடந்த மே மாதம் குழந்தை பிறக்க இருப்பதாக வினி ராமன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
வினி ராமன் வளைகாப்பு நிகழ்ச்சி
இந்த நிலையில் தான் வினி ராமனுக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. வினி ராமனின் வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வினி ராமன் வளைகாப்பு நிகழ்ச்சி
இதில், வினி ராமன் பட்டுப்புடவையில் அமர்ந்திருந்த நிலையில், வெளிநாட்டு உறவினர் ஒருவர் அவருக்கு நலங்கு வைக்கிறார்.
வினி ராமன் வளைகாப்பு நிகழ்ச்சி
சிறு குழந்தையுடன் இருப்பது போன்றும், கணவர் மேக்ஸ்வெல் உடன் இருப்பது போன்றும் உள்ள புகைப்படங்களை வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கிளென் மேக்ஸ்வெல் - வினி ராமன்
வினி ராமனின் வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், வினி ராமன் பட்டுப்புடவையில் அமர்ந்திருந்த நிலையில், வெளிநாட்டு உறவினர் ஒருவர் அவருக்கு நலங்கு வைக்கிறார்.