500ஆவது போட்டி: அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த விராட் கோலி!

Published : Jul 21, 2023, 10:09 AM IST

விராட் கோலி தனது 500ஆவது போட்டியில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

PREV
17
500ஆவது போட்டி: அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த விராட் கோலி!
ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டின் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

27
ரோகித் சர்மா

இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் வழக்கம் போல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 80 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில், 9 பவுண்டரியும், 2 சிக்ஸரும் அடங்கும்.

37
விராட் கோலி 500ஆவது போட்டி

இதே போன்று அதிரடியாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 57 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சுப்மன் கில் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே 8 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்த்து ரன்கள் குவிப்பில் ஈடுபட்டனர்.

47
விராட் கோலி 500ஆவது போட்டி

இது விராட் கோலியின் 500ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படி தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய விராட் கோலி 97ஆவது பந்தில் பவுண்டரி அடித்து அரைசதம் அடித்தார்.

57
விராட் கோலி 500ஆவது போட்டி

இதன் மூலமாக 500ஆவது போட்டியில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், எம்.எஸ்.தோனி என்று யாரும் 500ஆவது போட்டியில் அரைசதம் அடிக்கவில்லை.

67
விராட் கோலி 500ஆவது போட்டி

மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த 5ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 500ஆவது போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி 25535* ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். சச்சின் 34357 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரரின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

77
விராட் கோலி 500ஆவது போட்டி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 2000 ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற சாதனையையும் இந்தப் போட்டியில் விராட் கோலி நிகழ்த்தியுள்ளார். மறுபுறம் விராட் கோலிக்கு இணையாக ரவீந்திர ஜடேஜாவும் ரன்கள் சேர்த்தார். அவர், 84 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. இதில், விராட் கோலி 87 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 36 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories