ஐபிஎல் சீசன்கள் மூலமாக பணக்காரர்களாக மாறிய டாப் 10 பிளேயர்ஸ் யாரெல்லாம் தெரியுமா?

First Published | Jul 14, 2023, 1:22 PM IST

ஐபிஎல் மூலமாக பணக்காரர்களாக மாறிய டாப் 10 பிளேயர்ஸ் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா, ஜெயதேவ் உனத்கட், ஷாருக் கான், தீபக் சாஹர் உள்பட முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் )

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் மூலமாக திறமை வாய்ந்த வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கடந்த மே மாதம் முடிந்தது. இதில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனானது.

Tap to resize

ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை அணியில் இடம் பெற்று விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. அப்படி திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஐபிஎல் தொடர் மூலமாக பணக்காரர்களாகிய டாப் 10 கிரிகெட் வீரர்கள் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஜெயதேவ் உனத்கட்:

கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற்று 12 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து, 2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.11.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. அந்த சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தற்போது லக்னோ அணியில் இடம் பெற்ற அவரால், இந்த சீசனில் விளையாட முடியவில்லை. காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்.

தீபக் சாஹர்:

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தவர் தீபக் சாஹர். அதன் பிறகு அவரை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியில் மீண்டும் இணைந்தார். அப்போது அவர் ரூ.11 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் அவர் 13 விக்கெட்டுகள் கைப்பற்றினார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி அணி வெற்றி பெற காரணமாகவும் இருந்தார்.

கேமரூன் க்ரீன்:

கடந்த ஆண்டு இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணியின் கேமரூன் க்ரீன் இடம் பெற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார். இதன் மூலமாக மும்பை இந்தியனஸ் அணியில் ரூ.17.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த சீசனில் சிறப்பாகவும் விளையாடினார்.

இஷான் கிஷான்:

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்த நிலையில், தான் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏலத்தில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார். அதுவும் ரூ.15.25 கோடிக்கு ஏலத்தில் இடம் பெற்றார்.

ஜெய் ரிச்சர்ட்சன்:

ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஜெய் ரிச்சர்ட்சன், பிக்பாஷ் தொடரில் இடம் பெற்று சிறப்பாக விளையாடி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலமாக 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.14 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் ஏலத்தில் எடுக்கப்பட்டார். எனினும், அவரால் தாக்கத்தை ஏற்படுத்த் முடியவில்லை.

வணிந்து ஹசரங்கா:

இலங்கை அணியைச் சேர்ந்த வணிந்து ஹசரங்கா டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சால் ஐபிஎல் தொடரில் இடம் பெற்றார். அதுவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஹர்ஷல் படேல்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடிய ஹர்ஷல் படேல், திறமையான பந்து வீச்சின் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹர்ஷல் படேல் ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

ஷாருக் கான்:

ஐபிஎல் தொடர் மூலமாக மிகவும் பிரபலமானவர் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான். கடந்த 2021 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் இடம் பெற்று விளையாடினார். தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் பெற்றார். எனினும், 2022 ஆம் ஆண்டு ஏலத்தில் அவர் தக்க வைக்கப்படவில்லை. அதன் பிறகு இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் ரூ.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு விளையாடினார். எனினும், 14 போட்டிகளில் மொத்தமே 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா:

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். சிறந்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.9.72 கோடிக்கு சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கேப்டனாகவும் இருந்துள்ளார். நடந்து முடிந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டைட்டில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமே ரவீந்திர ஜடேஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!