2ஆவது டெஸ்டின் நல்ல ஆரம்பம்; பளூதூக்கிய பேர்ஸ்டோவ்; அஸ்வின் கிண்டல் டுவீட்!

First Published | Jun 28, 2023, 5:41 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் போராட்டக்காரரை அலேக்காக தூக்கி சென்ற புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் கிண்டல் செய்துள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா டெஸ்ட்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஷஸ் டெஸ்ட்

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் களமிறங்கினர்.

Tap to resize

ஆஸ்திரேலியா டெஸ்ட்

இதில், முதல் ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். அந்த ஓவரில் வார்னர் பவுண்டரி விளாசினார். 2ஆவது ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீசினார். அந்த ஓவரின் போது போராட்டக்காரர்ர்கள் மைதானத்திற்குள் புகுந்து கையில் வைத்திருந்த வர்ண பொடியை தூவினர்.

இங்கிலாந்துடெஸ்ட்

இதையடுத்து விக்கெட் கீப்பராக இருந்த ஜானி பேர்ஸ்டோவ் அவரை அலேக்காக தனது தோள்பட்டையில் தூக்கிச் சென்று வெளியில் கொண்டு சென்று விட்டார்.

ஆஷஸ் டெஸ்ட்

அதன் பிறகு தனது டீஷர்ட் மற்றும் கையுறை ஆகியவை வர்ண பொடியால் அழுக்கான நிலையில் டிரெஸிங் ரூம் சென்று மாற்றிவிட்டு மீண்டும் வந்தார். இதற்கிடையில் மைதான பராமரிப்பாளர்கள் வந்து மைதானத்தை சுத்தம் செய்தனர்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா டெஸ்ட்

இதன் காரணமாக மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க வர்ணனையாளர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

ஜானி பேர்ஸ்டோவ்

இந்த நிலையில், பேர்ஸ்டோவின் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் நக்கலாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நல்ல தொடக்கம், பேர்ஸ்டோவ் ஏற்கனவே சில பளு தூக்குதல்களை செய்துள்ளார் என்று விமர்சனம் செய்துள்ளார்.

ஜானி பேர்ஸ்டோவ்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசியாக 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Latest Videos

click me!