10 ரன்களில் சதத்தை கோட்டை விட்ட சாய் சுதர்சன்: லைகா கோவை கிங்ஸ் 181 ரன்கள் குவிப்பு!

First Published | Jun 16, 2023, 9:33 PM IST

நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்துள்ளது.

லைகா கோவை கிங்ஸ்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் ஜூலை 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது.

லைகா கோவை கிங்ஸ்

இதற்கு முன்னதாக நடந்த முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதே போன்று நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து லைகா கோவை கிங்ஸ் மற்றும் ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 6ஆவது போட்டி தற்போது கோயம்புத்தூரில் நடந்து வருகிறது.

Tap to resize

லைகா கோவை கிங்ஸ்

லைகா கோவை கிங்ஸ்:

பி சச்சின், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ராம் அரவிந்த், முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), முகமது, கிரண் ஆகாஷ், மணிமாறன் சித்தார்த், ஜதாவேத் சுப்ரமண்யன், கே கௌதம் தாமரை கண்ணன்

லைகா கோவை கிங்ஸ்

நெல்லை ராயல் கிங்ஸ்:

அருண் கார்த்திக் (கேப்டன்), நிதிஷ் ராஜகோபால், எஸ் ஜே அருண் குமார், சோனு யாதவ், அஜிதேஷ் குருசாமி, ரிதிக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), லக்‌ஷய் ஜெயின், மோகன் பிரசாந்த், சந்தீப் வாரியர், பொய்யாமொழி, மிதுன்

லைகா கோவை கிங்ஸ்

இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய லைகா ராயல் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர் சச்சின் 0 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சுரேஷ்குமார் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த சாய் சுதர்சன் வழக்கம் போன்று தனது அதிரடி ஆட்டத்தை ஆடினார். இதில், அவர் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 52 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். இந்த முறை 10 ரன்களில் தனது சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இதற்கு முன்னதாக முதல் போட்டியில் 86 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா கோவை கிங்ஸ்

இவரைத் தொடர்ந்து வந்த ராம் அரவிந்த் 18 ரன்களிலும், ஷாருக்கான் 17 ரன்களிலும் முகிலேஷ் 15 ரன்களிலும் ஆட்டமிழக்க இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சோனு யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!