குடும்பத்துடன் தோனி
கடந்த 28 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்க இருந்தது.
ருத்துராஜ் கெய்க்வாட் - வருங்கால மனைவி
ஆனால் அன்றைய போட்டியில் மழை பெய்து போட்டி நடக்கவிடாமல் செய்தது. இதனால் மறுநாளைக்கு போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நடந்தது.
குடும்பத்துடன் ஜடேஜா
நேற்று முன்தினம் போன்று தொடர்ந்து மழை பெய்தால் குஜராத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும். அப்படி நடக்கவில்லை. குஜராத் ஆடிய பிறகு சென்னை அணி விளையாடும் போது மழை குறுக்கிட்டது.
குடும்பத்துடன் ரஹானே
மழை வந்து கொஞ்ச நேரத்திலேயே நின்றிருந்தால் கூட 20 ஓவர்களும் வீசப்பட்டிருக்கும். அப்படியும் நடக்கவில்லை. ஆனால், போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தோனி
இதன் காரணமாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் தொடக்க முதலே அதிரடி காட்டினர். கெய்க்வாட் 26, கான்வே 47, ரஹானே 27, ராயுடு 19, தோனி 0 என்று ஒவ்வொருவரும் ரன்கள் சேர்த்தனர்.
எம் எஸ் தோனி
கடைசியாக வந்த ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்துக் கொடுக்கவே சிஎஸ்கேயின் கனவு நிறைவேறியது. இறுதியாக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5ஆவது முறையாக ஐபிஎல் டிராபியை கைப்பற்றியது.