விராட் கோலி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 65ஆவது போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹென்ரிச் கிளாசெனின் அதிரடி சதத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது.
விராட் கோலி
பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி 100, ஃபாப் டூப்ளெசிஸ் 71 ரன்கள் சேர்க்கவே 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திற்கு முன்னேறியது.
விராட் கோலி
இந்தப் போட்டியில் விராட் கொலி சதம் அடித்ததன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் மொத்தமாக 6 சதங்கள் அடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சீசனில் மட்டும் 4 சதங்கள் அடித்துள்ளார்.
விராட் கோலி
2019 ஆம் ஆண்டு ஒரு சதம் அடித்துள்ளார். இதன் மூலமாக கிறிஸ் கெயிலின் 6 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லர் 5 சதங்கள் உடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி
டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை விராட் கோலியை சாரும்.
விராட் கோலி
ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது அதிக சதங்கள்.
டெஸ்டில் ஒரு இந்தியரின் நான்காவது அதிக சதம்.
சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக சதங்கள் என்று பல சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
விராட் கோலி
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த டி20 போட்டியில் சிக்ஸர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார்.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஒரு நாள் போட்டியில் சிக்ஸர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார்.
இதே போன்று நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்தார்.
விராட் கோலி
மே 18, 2016 - விராட் கோலி 15 ஓவர்கள் போட்டியில் கையில் 8 தையல்களுடன் சதம் அடித்தார்.
மே 18, 2023 - விராட் கோலி நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தில் சதம் அடித்தார்.
விராட் கோலி
ஒரு இந்திய வீரராக ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்களின் பட்டியலில் விராட் கோலி (15) 4ஆவது இடம் பிடித்தார். ரோகித் சர்மா 19 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.
விராட் கோலி
விராட் கோலியின் ஜெர்சி நம்பர் 18. அவருக்கு ராசியான 18 ஆம் தேதியான நேற்று சதங்கள் குவித்து அசத்தியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜஸ்தன் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கையில் 8 தையல்களுடன் விளையாடி சதம் அடித்து அசத்தியுள்ளார்.