குடும்பத்தோடு வந்த ஜெயம் ரவி: சென்னை மேட்சை கண்டு ரசித்த நயன் – விக்கி!

First Published | May 15, 2023, 6:41 PM IST

சென்னை மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலாக நேற்று நடந்த போட்டியை ஜெயம் ரவி தனது குடும்பத்தோடு கண்டு ரசித்துள்ளார்.

சதீஷ்

சென்னையில் நடக்கும் போட்டி என்றாலே சினிமா பிரபலங்கள் கண்டிப்பாக இருப்பார்கள் என்று சொல்லும் அளவிற்கு சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். அதிலேயும் எம்.எஸ்.தோனி என்றால் சொல்லவே வேணாம்.

சஞ்சனா திவாரி

அந்தளவிற்கு ரசிகர்கள் பட்டாளங்களைக் கொண்டவர் தோனி. இவ்வளவு ஏன், சென்னையில் நடக்கும் கடைசி ஐபிஎல் லீக் போட்டி என்பதாலும் அதிக ரசிகர்கள் போட்டியை கண்டு ரசித்துள்ளனர்.

Tap to resize

ஆத்மிகா

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலாக நேற்று 61ஆவது ஐபிஎல் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆத்மிகா

பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக கொல்கத்தாவின் பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறது.

ஜெயம் ரவி குடும்பம்

இந்த நிலையில், சென்னையில் நடந்த கடைசி லீக் போட்டி என்பதால், இந்தப் போட்டியை காண்பதற்கு ஜெயம் ரவி தனது மனைவி மற்றும் மகன்கள் என்று குடும்பத்தோடு வந்திருந்தார். 

ஜெயம் ரவி

சதீஷ், ஆத்மிகா, சஞ்சனா திவாரி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் என்று ஏராளமான பிரபலங்கள் வந்திருந்தனர். இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்த நிலையில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியிருக்கிறது.

நயன்தாரா

அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். வரும் 20 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 67ஆவது போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!