சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 55ஆவது போட்டி நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர்.
ஹர்பஜன் சிங் டுவிட்டர்
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஆனால், அவர்களால் ஒவ்வொரு ரன்னாக மட்டுமே எடுக்க முடிந்தது. ஒரு சில பவுண்டரியும் அடித்தனர். பந்துக்கும், ரன்னுக்கும் சரியாக இருந்தது. ஒரு கட்டத்தில் கான்வே 10 ரன்னிலும், கெய்க்வாட் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஹர்பஜன் சிங் டுவிட்டர்
சென்னை சூப்பர் கிங்ஸ்
அதன் பிறகு வந்த ரஹானேயும் 21 ரன்னில் வெளியேற மொயீன் அலி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது தான் ஷிவம் துபே களமிறங்கினார். அவர் வழக்கம் போன்று வான வேடிக்கை காட்டினார். 3 சிக்சர்கள் அடித்து 25 ரன்களில் வெளியேறினார். அம்பத்தி ராயுடு 23 ரன்களிலும், ஜடேஜா 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஹர்பஜன் சிங் டுவிட்டர்
சென்னை சூப்பர் கிங்ஸ்
அடுத்து வந்த கேப்டன் தோனி அதிரடியாக ஆடினார். அவர் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி மட்டுமே எடுத்து 20 ரன்களில் ஆட்டமிழந்தார். 19ஆவது ஓவரில் சேர்க்கப்பட்ட 20 ரன்களே வெற்றிக்கு காரணமாக அமையும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.
ஹர்பஜன் சிங் டுவிட்டர்
சென்னை சூப்பர் கிங்ஸ்
பின்னர் எளிய இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தார் வார்னர். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பிலிப் சால்ட் 17 ரன்களில் வெளியேறினார். சரி, மிட்செல் மார்ஷ் பார்த்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை மணீஷ் பாண்டே ரன் அவுட் ஆக்கிவிட்டார். அஜிங்கியா ரஹானே புத்திசாலித்தனமாக பந்தை வீசி எறியாமல் கையிலேயே கொண்டு வந்து ஸ்டெம்பில் அடித்தார். மார்ஷ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
இதையடுத்து மணீஷ் பண்டே 27 ரன்களிலும், ரிலே ரோஸோவ் 35 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஹர்பஜன் சிங் டுவிட்டர்
சென்னை சூப்பர் கிங்ஸ்
எனினும், சென்னைக்கோ, டெல்லிக்கோ புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் 15 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் 8 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்திலும் உள்ளன.
ஹர்பஜன் சிங் டுவிட்டர்
சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எத்தனை அரசர்கள் இருக்கிறார்கள் என்பதைவிட. எப்படிப்பட்ட அரசன் இருக்கிறார் என்பதே முக்கியம்.
ஹர்பஜன் சிங் டுவிட்டர்
சென்னை சூப்பர் கிங்ஸ்
மஞ்சள் ஆடை சூடிய சந்தன கருப்பு தோனி முன் டெல்லியாம் மட்டும் தப்ப முடியுமா. வெற்றியை தேடுபவர்களுக்கு மத்தியில், வெற்றிக்கு விலாசம் கொடுத்த மாமன்னன் மஹி என்று குறிப்பிட்டுள்ளார். இவர் ஒருவரால் மட்டுமே இப்படியெல்லாம் தோனியை புகழ்ந்து பேச முடியும் என்று நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
ஹர்பஜன் சிங் டுவிட்டர்