சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் வாய்ப்புக்காக போராடி வருகின்றன. இன்று சென்னைக்கு எதிராக நடக்கும் போட்டியில் கூட டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்புக்கு அடியெடுத்து வைக்கும். இல்லையென்றால் டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் தகர்க்கப்படும்.
சிஎஸ்கே
சென்னையில் நடக்கும் இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் கடுமையாக வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஆஸ்கர் விருது வென்ற பொம்மன் - பெல்லி தம்பதியினர் மற்றும் The Elephant Whisperers என்ற ஆவணக் குறும்படத்தின் பெண் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார்.
பொம்மன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் 7ஆம் நம்பர் ஜெர்சியில் பொம்மன், பெல்லி மற்றும் கார்த்திகி கோல்சால்வ்ஸ் என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்ட ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், யானைகள் நலனுக்காக முதுமலை புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு காசோலையும் வழங்கப்பட்டுள்ளன.
பெல்லி
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன் கூறியிருப்பதாவது: ஆஸ்கர் விருது வென்ற பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியினர் மற்றும் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோரை கொண்டாடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
கார்த்திகி கோன்சால்வ்ஸ்
அம்மு மற்றும் ரகு என்ற இரு யானைகளின் பராமரிப்பு செலவுகளுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வதன் மூலமாக எங்களது ஆதரவை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறியுள்ளார். தோனியும் தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.
புகைப்படத்திற்கு நன்றி - சிஎஸ்கே டுவிட்டர்
ஷிவா தோனி
அதோடு, தனது மகள் ஷிவாவையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொம்மன், பெல்லி மற்றும் கார்த்திகி கோன்சால்வ்ஸ் உடன் தோனியின் மகள் ஷிவா.