மும்பையை ஜெயிக்க 200 ரன்கள் போதும் என்று நாங்கள் நினைத்துவிட்டோம் - பாப் டூப்ளெசிஸ் வேதனை!

First Published | May 10, 2023, 11:56 AM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 53 ஆவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் மற்றும் நேஹல் வதேரா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 200 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 


ஆர்சிபி

இந்த தோல்விக்குப் பிறகு பேசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் கூறியிருப்பதாவது: மும்பையை வீழ்த்த 200 ரன்கள் போதும் என்று நாங்களே எங்களை ஏமாற்றிவிட்டோம். ஆனால், கடைசி 5 ஓவர்களில் போதுமான ரன்கள் நாங்கள் எடுக்கவில்லை.

தினேஷ் கார்த்திக்

இன்னும், 20 ரன்களுக்கு மேலாக நாங்கள் எடுத்திருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சவால் கொடுத்திருப்போம். சூர்யகுமார் யாதவ் சிறப்பான பேட்ஸ்மேன். அவருக்கு எப்படி பந்து வீசினாலும் அதனை எந்தப் பக்கம் அடிக்க வேண்டும் என்று நன்கு அறிந்து கொண்டு அதற்கேற்ப ரன்கள் எடுப்பார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

அவரை கட்டுப்படுத்துவது என்பது ரொம்பவும் கடினம். இந்த சீசனில் சிராஜ் நன்கு பந்து வீசினார். ஆனால், டி20 கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். இனிவரும் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தால் தான் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.

ஆர்சிபி

இதுவரையில் விளையாடிய 11 போட்டிகளில் ஆர்சிபி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. இனிவரும் 3 போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் புள்ளிப்பட்டியல் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!