மும்பை வான்கடே ஸ்டேடியம்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 54ஆவது போட்டி நேற்று மும்பையின் கோட்டை என்று சொல்லப்படும் வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ்
அதன்படி முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் அதிரடியாக ஆடி 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இதே போன்று மற்றொரு அதிரடி வீரர் மேக்ஸ்வெல் தன் பங்கிற்கு வான வேடிக்கை காட்டி 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 30 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஆர்சிபி அணி 199 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 7 ரன்களில் வெளியேறினார்.
சூர்யகுமார் யாதவ்
மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷான் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் நேஹல் வதேரா இருவரும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில், சூர்யகுமார் யாதவ் பவுண்டரியும், சிக்ஸருமாக விரட்டினார். 35 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உள்பட 83 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மா
அடுத்து வந்த டிம் டேவிட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இறுதியாக நேஹல் வதேரா 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும் இழந்து 200 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ்
அதுமட்டுமின்றி, புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், மும்பை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும், 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஆனால், பெங்களூரு அணி நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலமாக 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும், 3 போட்டிகள் எஞ்சிய நிலையில், 3 போட்டியிலும் ஜெயித்தால் கூட 16 புள்ளிகள் மட்டுமே பெறும். ஆனாலும் பிளே ஆஃப் வாய்ப்பு ரொம்பவே குறைவு தான். முதல் 4 இடங்களில் உள்ள மற்ற அணிகளின் புள்ளிப்பட்டியல் மற்றும் ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபியின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.