கோலியின் ஆக்ரோஷத்தை அடக்கிய டெல்லி: ஒரு வழியா கை கொடுத்து சமாதானமான விராட் கோலி - கங்குலி!

First Published May 7, 2023, 10:47 AM IST

பெங்களூரில் வாங்கிய அடிக்கு டெல்லியில், கேபிடல்ஸ் அணி பதிலடி கொடுத்து கோலியின் ஆக்ரோஷத்தை அடக்கியுள்ளது.
 

டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி பெங்களூரு மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. 
 

டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பின்னர், கடின இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மணீஷ் பாண்டே மட்டும் 50 ரன்கள் அடித்துக் கொடுத்தார். இந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு ஒவ்வொரு விக்கெட் விழும் போது விராட் கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டார். 

டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

அதுமட்டுமின்றி வெளியில் அமர்ந்திருக்கும் டெல்லி அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலியை கூட முறைத்துக் கொண்டார். கடைசியாக டெல்லி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இதையடுத்து விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி இருவரும் கை கொடுக்காமல் சென்றனர். மேலும், விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குலி அன்பாலோ Unfollow செய்தார். இதையடுத்து ஐபிஎல் தொடரின் 50ஆவது போட்டியில் இரு அணிகளும் மோதின. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
 

டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பின்னர் கடின இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிலிப் சால்ட் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். வார்னர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 26 ரன்களில் வெளியேறினார். கடைசியாக அதிரடி காட்டி ஆடிய பிலிப் சால்ட் 87 ரன்கள் அடித்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். 
 

டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இதில், 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும். இறுதியாக ரிலீ ரோஸோவ் 35 ரன்கள் எடுக்க, டெல்லி கேபிடல்ஸ் 20 பந்துகள் எஞ்சிய நிலையில் 3 விக்கெட் இழந்து 187 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஆர்சிபி அணி தோல்வி அடைந்தால் தான் விராட் கோலி அமைதியை கடைபிடிக்கிறார். இல்லையென்றால், அவரது ஆக்ரோஷத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இவ்வளவு ஏன், லக்னோ அணியுடன் நடந்த போட்டியின் போது விராட் கோலி ஒவ்வொருவரிடமும் வாக்குவாதம் செய்த நிலையில் கடைசியாக கவுதம் காம்பீரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அவருக்கு போட்டியின் முழு சம்பளமும் அபராதமாக விதிக்கப்பட்டது.
 

டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்த நிலையில், நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அமைதியை கடைபிடித்த விராட் கோலி மற்றும் டெல்லியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி இருவரும் சமாதானமாக சென்றுள்ளனர். ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொண்டனர். இந்தப் போட்டியில் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு 51 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாக குறைந்துள்ளது.

click me!