Latest Videos

போட்டினா சண்டை; அப்புறம் சமாதானம்; வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிராஜ் - சால்ட்; நல்ல வேல ஃபைன் இல்ல!

First Published May 7, 2023, 9:54 AM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் வீரர் சால்ட் பிலிப் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 50ஆவது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டுப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடல்ஸ்

அதன்படி முதலில் ஆடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் பாப் டூப்ளெசிஸ் இருவரும் ரன் கணக்கை தொடங்கினர். இதில், கோலி தனது 50ஆவது அரைசதம் அடித்ததோடு 7000 ரன்களையும் கடந்து சாதனை படைத்தார். இந்த சீசனில் இதுவரையில் 10 போட்டிகளில் விளையாடிய கோலி 419 ரன்கள் குவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ்

பாப் டூப்ளெசிஸ் 45 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த அதிரடி நாயகனோ கோல்டன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மஹிபால் லோம்ரோர் தன் பங்கிற்கு அதிரடியாக ஆடி 54 ரன்கள் சேர்த்து கொடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். தினேஷ் கார்த்திக்கோ 11 ரன்களில் வெளியேறினார். இறுதியாக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
 

டெல்லி கேபிடல்ஸ்

பின்னர் கடின இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். போட்டியின் 5ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அப்போது சால்ட் பேட்டிங் ஆடினார்.

டெல்லி கேபிடல்ஸ்

முதல் பந்தில் சிக்ஸரும், 2ஆவது பந்திலும் சிக்ஸர் அடித்த சால்ட் 3ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார். 4ஆவது பந்தையும் அடிக்க முயற்சிக்க, சிராஜ் வைடாக வீசினார். தொடர்ந்து தனது பந்தில் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்ததால் ஆத்திரமடைந்த சிராஜ், சால்ட் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

டெல்லி கேபிடல்ஸ்

அப்போது பாப் டுப்ளெசிஸ் மற்றும் நடுவர்கள் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். அந்த ஓவரில் அதன் பிறகு சால்ட் மற்றும் வார்னர் ஆகியோர் தலா 1 ரன்கள் எடுக்க மொத்தமாக 19 ரன்கள் எடுக்கப்பட்டது. 5 ஓவர்களில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் குவித்தது. 
 

டெல்லி கேபிடல்ஸ்

அதன் பிறகு வார்னர் 22 ரன்களில் ஆட்டமிழக்க, சால்ட் வானவேடிக்கை காட்ட ஆரம்பித்தார். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இறுதியாக அவர் தான் போட்டியை முடித்துக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 45 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் உள்பட 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
 

டெல்லி கேபிடல்ஸ்

இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 187 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து சிராஜ் மற்றும் சால்ட் இருவரும் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக்கொண்டு கட்டிப் பிடித்து சமாதானமாகினர். 
 

டெல்லி கேபிடல்ஸ்

இந்த வெற்றியின் மூலமாக முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்து 9ஆவது இடத்திற்கு முன்னேறியது. இதுவரையில் 10 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்துள்ளது. இன்னும் 4 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெறும். இந்தப் போட்டியில் தோற்றதன் மூலமாக ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு குறைந்துள்ளது.
 

click me!