IPL 2023: DC vs RCB மோதல்.. ஆர்சிபி அணியில் 38 வயது வீரருக்கு கம்பேக் சான்ஸ்.! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

First Published | May 6, 2023, 2:54 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸ் - ஆர்சிபி அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு கிட்டத்தட்ட முன்னேறிவிட்டது. எஞ்சிய 3 இடங்களுக்கு 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே, லக்னோ, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 6 அணிகளும் தலா 5 வெற்றிகளை பெற்றிருப்பதால் இனிவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானவை. டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பேயில்லை.

Tap to resize

இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டெல்லி அணிக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் ஆர்சிபி அணிக்கு இது மிக முக்கியமான போட்டி. இந்த சீசனின் இடையே மாற்று வீரராக அணியில் எடுக்கப்பட்ட 38 வயது சீனியர் வீரரான கேதர் ஜாதவுக்கு இந்த போட்டியில் ஆர்சிபி அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கும். 2021ல் சன்ரைசர்ஸுக்கு ஆடிய கேதர் ஜாதவ், அதன்பின்னர் ஐபிஎல்லில் ஆடாத நிலையில், இன்றைய போட்டியில் அவருக்கு ஆட வாய்ப்பு கிடைக்கும்.

உத்தேச ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், வனிந்து ஹசரங்கா, கரன் ஷர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.
 

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி: 

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மனீஷ் பாண்டே, ப்ரியம் கர்க், அக்ஸர் படேல், ரிப்பல் படேல், அமான் கான், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, இஷாந்த் சர்மா.
 

Latest Videos

click me!