டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு போராடி வருகின்றன. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் 10 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் இருக்கும் டெல்லிக்கும், 4ஆவது இடத்தில் இருக்கும் லக்னோவுக்கும் 3 புள்ளிகள் தான் வித்தியாசம்.
சிஎஸ்கே
இதனால் இன்று சென்னைக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சென்னை அணியை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதுமட்டுமின்றி கடைசியாக நடந்த ஒரு சில போட்டிகளை வைத்து பார்க்கும் போது சொந்த மண்ணில் விளையாடும் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது.
எம்.எஸ்.தோனி
சென்னையில் நடந்த போட்டியில் சென்னையும், கொல்கத்தாவில் நடந்த போட்டியில் கொல்கத்தாவும், மும்பையில் நடந்த போட்டியில் மும்பையும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதுவரையில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் 27 போட்டிகளில் மோதியுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ்
இதில் 17 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 10 முறை டெல்லி கேபிடல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 8 போட்டிகளில் 6ல் சிஎஸ்கே அணியும், 2ல் டெல்லி கேபிடல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
டெல்லிகேபிடல்ஸ்
கடைசியாக நடந்த 5 போட்டிகளில் 2ல் சிஎஸ்கேயும், 3ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு போட்டியில் சிஎஸ்கே தான் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடந்த 5 போட்டிகளில் 3ல் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றிருக்கிறது.
டெல்லி கேபிடல்ஸ்
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 55ஆவது போட்டி நடக்கிறது. இதில், டெல்லி மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.