இந்த தோல்வியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் இன்னமும் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திலேயே நீடிக்கிறது. இந்தப் போட்டிக்குப் பிறகு சென்னையில் நடந்த கடைசி லீக் போட்டி என்பதால், தோனி உள்பட மற்ற வீரர்களும் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மைதானத்திலேயே வலம் வந்தனர். மேலும், அவர்களுக்கு டென்னிஸ் பந்து, ஜெர்சி எல்லாமே பரிசாக வழங்கப்பட்டது.